தொழில்நுட்பம்

Google Logo Update: 10 வருஷத்துக்கு பிறகு "G" லோகோவில் கை வைத்த கூகுள்!

Google Logo Change Update in Tamil : இணையத்தை பயன்படுத்துவோர்களில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தேடுதலுக்காக பயன்படுத்தும் தேடுப்பொறி கூகுள் தான். இந்நிலையில் ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு பின் தனது லோகோவில் ஒரு சின்ன மாற்றத்தை செய்துள்ளது கூகுள் நிறுவனம்.

Google Logo Update: 10 வருஷத்துக்கு பிறகு
Google Logo Change Update in Tamil
Google Logo Change Update in Tamil :கூகுள் ஆப் செயலி என்பதை குறிக்கும் வகையில் நமது மொபைலில் "G" என்ற லோகோ மட்டும் காட்டும். இந்த "G" பொதுவாக கூகுளின் நான்கு வண்ணங்களில் (சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம்) இருக்கும். G லோகோவானது 4 வண்ணங்களில் பட்டைத் தீட்டிய திடமான வடிவமைப்பை கொண்டிருக்கும். தற்போது அந்த திடமான வண்ணத் தொகுதிகளுக்குப் பதிலாக சாய்வான (gradient) வடிவமைப்பைக் கொண்டு புதுப்பித்துள்ளது கூகுள் நிறுவனம். இந்த மாற்றம், கடந்த மே 12 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏறக்குறைய கடந்த 10 ஆண்டுகளில் "G" என்ற எழுத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரிய மாற்றம் இது தான்.

லோகோவில் ஏன் மாற்றம்?

'G' எழுத்துக்கான புதுப்பிப்பு ஆறு எழுத்துக்கள் கொண்ட 'கூகுள்' (Google) லோகோவிற்கும் பொருந்துமா? என்பதை தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் இன்னும் தெளிவுப்படுத்தவில்லை. புதிய லோகோ அதன் பிற பயன்பாடுகளான குரோம் மற்றும் மேப்ஸுக்கும் பொருந்துமா? என்பதை கூகுள் உறுதிப்படுத்தவில்லை. புதிய கூகுள் லோகோ ஏன் மாற்றப்பட்டது? என்பதற்கும் சரியான அதிகாரப்பூர்வ விளக்கம் கூகுள் தரப்பில் தரப்படவில்லை.
Image

இதற்கு முன்னர் 2015 ஆம் ஆண்டு கூகுள் தனது லோகோவில் சில மாற்றங்களை செய்திருந்தது. கூகுள் என்கிற எழுத்துருவை செரிஃப்பிலிருந்து சான்ஸ்-செரிஃப் (serif to sans-serif) என மாற்றியது. மேலும் "G" என்கிற அடையாள லோகோ 4 வண்ணங்களில் பிரதிபலிக்க தொடங்கியது.

”கூகுள் iOS செயலிக்கான அப்டேட்டின் (கூகுள் 16.8 பீட்டா) ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை புதிய கூகுள் லோகோ வெளியிடப்பட்டது” என பிரபல 9to5Google இணையதளம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க : இ-பாஸ்போர்ட்டில் இவ்வளவு விஷயம் இருக்கா? எப்படி வாங்குறது?

AI பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், கூகுளின் ஜெமினி சாட்பாட் தற்போது பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ChatGPT- பயன்படுத்தி வந்த பலரின் முன்னணி விருப்பங்களில் ஒன்றாக ஜெமினி மாறியுள்ளது.இதற்கு முழுக்காரணம் சமீபத்தில் வெளியான ஜெமினி 2.5 ப்ரோ அப்டேட் தான். ஜெமினி ஏஐ அம்சங்கள் ஜிமெயில், காலண்டர், டாக்ஸ், டிரைவ் போன்றவற்றிலும் தற்போது கிடைக்கத் தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.