Google I/O 2025 நிகழ்வு கலிபோர்னியாவின் மவுண்டன் வியூவில் (Mountain View, California) உள்ள ஷோர்லைன் ஆம்பிதியேட்டரில் (Shoreline Amphitheatre) கடந்த மே 20 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது. Google I/O என்பது கூகிள் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் நடத்தும் மென்பொருள் உருவாக்குநர்கள் மாநாடு (developer conference) ஆகும்.
Google I/O 2025 நிகழ்வு:
"I/O" என்பது "Input/Output" என்பதையும், "Innovation in the Open" என்பதையும் குறிக்கிறது. இந்த நிகழ்வில், கூகுள் தனது புதிய தயாரிப்புகள், தொழில்நுட்பங்கள் மற்றும் AI, Android, Chrome, Cloud போன்றவற்றில் மேற்கொண்டுள்ள புதிய அப்டேட் அம்சங்களையும் அறிமுகப்படுத்துவது வழக்கம். கூகுள் டெக் உலகில் முன்னணி நிறுவனமாக விளங்குவதால், முதலீட்டாளர்கள்- டெக் வல்லுநர்கள் இந்த மாநாட்டினை உன்னிப்பாக கவனிப்பது இயல்பான ஒன்று தான். கடந்த சில வருடங்கள் போன்றே இந்த ஆண்டும் செயற்கை நுண்ணறிவு (AI) தான் Google I/O 2025 நிகழ்வின் ஹீரோவாக திகழ்ந்தது எனலாம்.

Google AI Ultra திட்டம்:
Google I/O 2025 நிகழ்வில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், கூகுளின் புதிய Google AI Ultra திட்டம் குறித்து இப்பகுதியில் கொஞ்சம் தெளிவாக காணலாம்.
Google AI Ultra திட்டம் குறித்த அறிவிப்பை ஷிம்ரிட் பென்-யயர் (Shimrit Ben-Yair), (கூகுள் ஃபோட்டோஸ் மற்றும் கூகுள் ஒன் துணைத் தலைவர்) வெளியிட்டார். குறிப்பிட்ட பிரீமியம் தொகையினை செலுத்தினால், நீங்களின் கூகுளின் அத்தனை அம்சங்களையும் மேம்பட்ட AI தொழில்நுட்பத்துடன் பயன்படுத்தலாம் என்பதே இத்திட்டத்தின் சிறப்பு.
அமெரிக்காவில் முதற்கட்டமாக அறிமுகம்:
இந்த Google AI Ultra திட்டம், அமெரிக்காவில் மாதத்திற்கு $249.99 என்கிற பிரீமியம் விலையில் கிடைக்கிறது. முதல் முறையாக Google AI Ultra பயன்படுத்துபவர்களுக்கு முதல் மூன்று மாதங்களுக்கு பிரீமியம் தொகையில் 50% தள்ளுபடி ( $124.99) என்கிற சிறப்புச் சலுகையையும் அறிவித்துள்ளது கூகுள் நிறுவனம். அமெரிக்காவினை தொடர்ந்து மற்ற நாடுகளுக்கும் விரைவில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்படும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. சப்ஸ்கிரைப் செய்வதால் கிடைக்கும் பயன்கள்?

ஜெமினி (Gemini): கூகுளின் பிரத்யேக ஏஐ தளமான ஜெமினியில் புதியதாக Veo 2,Veo 3 என்கிற அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. சப்ஸ்கிரைப் செய்வதன் மூலம் வெயோ 2 (Veo 2) மூலம் அதிநவீன வீடியோ உருவாக்கம் மற்றும் வெயோ 3 (Veo 3) மாடலுக்கான ஆரம்ப அணுகலை நீங்கள் பெறமுடியும். கோடிங், கல்வி ஆராய்ச்சி போன்றவற்றிற்காக பிரத்யேகமாக இவை வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஃப்ளோ (Flow): நடப்பாண்டில் கூகுளின் புதிய அப்டேட்டுகளில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது, ப்ளோ தான். இந்த புதிய AI திரைப்பட உருவாக்கும் கருவியானது, கூகுள் டீப்மைண்டின் (Google DeepMind) மிகவும் மேம்பட்ட மாடல்களுக்காக (Veo, Imagen மற்றும் Gemini) சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் கற்பனைகளை திரைப்படமாக உருவாக்க முடியும் அதுவும் 1080p வீடியோ தரத்தில்.
விஸ்க் (Whisk): நாம் உரையாகவோ, படமாகவா சிலவற்றை வழங்கி நமது விருப்பத்தை தெரிவித்தால் அதே அனிமேட் முறையில் 8 வினாடிக்கு தெளிவான வீடியோக்களாக மாற்ற Whisk உதவுகிறது. இந்த சேவையினையும் நீங்கள் Google AI Ultra திட்டத்தினை சப்ஸ்கிரைப் செய்வதன் மூலம் பெற முடியும்.
ஸ்டோரேஜ் பிரச்சினை இனி இல்லை:
கூடுதல் அம்சங்களாக, இந்தத் திட்டம் Gmail, Docs, Vids மற்றும் Chrome ஆகியவற்றில் ஜெமினி ஏஐ அணுகலையும், ஏஜென்டிக் ஆராய்ச்சி முன்மாதிரியான Project Mariner- சேவையினையும் Google AI Ultra திட்டம் வழங்குகிறது. சந்தாதாரர்களுக்கு YouTube Premium சேவை கிடைப்பதோடு, Google Photos, Drive, Gmail ஆகியவற்றின் சேமிப்புத்திறன் கொள்ளவினை 30 TB அளவில் வழங்குகிறது கூகுள்.
தற்போதுள்ள கூகுளின் AI பிரீமியம் திட்டம், இனி Google AI Pro என்று அழைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Google AI Ultra திட்டத்திற்கான பிரீமியம் அமெரிக்காவில் மாதத்திற்கு $249.99 என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய இந்திய ரூபாய் மதிப்பீட்டில் தோராயமாக ₹21,491-ரூபாய் வருகிறது. கூகுளின் Flow,Whisk பயன்பாடு எந்தளவிற்கு பயனர்களை கவரும் என்பதை பொறுத்துத்தான் இந்த கூகுளின் AI பிரீமியம் திட்டம் வெற்றிப்பெறுமா என்பது தெரிய வரும் என டெக் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.