தொழில்நுட்பம்

10G Internet: உலக நாடுகளை தூக்கி சாப்பிட்ட சீனா.. இனி 5G-லாம் இல்ல ஒன்லி 10G தான்

ஹூவாய் (Huawei) தொழில்நுட்ப நிறுவனம், சீனா யூனிகாம் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து 10ஜி ஸ்டாண்டர்ட் பிராட்பேண்ட் நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தி உள்ளது.

10G Internet: உலக நாடுகளை தூக்கி சாப்பிட்ட சீனா.. இனி 5G-லாம் இல்ல ஒன்லி 10G தான்
உலக நாடுகளை தூக்கி சாப்பிட்ட சீனா.. இனி 5G-லாம் இல்ல only 10ஜி தான்
உலகில் இணைய சேவையின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. டேட்டிங் முதல் ஷாப்பிங் வரை தற்போது நமது உள்ளங்கையில் இருக்கிறது. சோறு இல்லாமல் கூட இருந்து விடலாம் ஆனால் செல்போனும் இணைய சேவையும் இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலையில் தற்போது மக்கள் உள்ளனர். பள்ளி வகுப்பறை முதல் கடைக்கோடி தெருக்கடை வரை இணைய சேவை என்பது மிகவும் அத்தியாவசியமாகி விட்டது.

10G இணைய சேவை

முதலில் 2G-யில் தொடங்கிய இணைய சேவை பின்னர் 4G, 5G என விரிவடைந்தது. இந்தியா உட்பட பல நாடுகளில் 5G சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த 5G சேவை பல இடங்களில் மிகவும் மோசமாக உள்ளது. சில நேரங்களில் ஒரு Document அல்லது வீடியோ பதிவிறக்கம் செய்ய பல மணி நேரங்களாகுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உலக நாடுகளை தூக்கி சாப்பிடும் வகையில் சீனா 10 G இணையசேவையை அறிமுகப்படுத்தி உள்ளது.

அதன்படி, ஹூவாய் (Huawei) தொழில்நுட்ப நிறுவனம், சீனா யூனிகாம் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து இந்த 10ஜி ஸ்டாண்டர்ட் பிராட்பேண்ட் நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தி உள்ளது. முதற்கட்டமாக சீனாவின் ஹெபெய் மாகாணத்தின் சியோங்கான் நியூ என்ற பகுதியில் 10G இணைய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நெட்வொர்க்கின் பதிவிறக்க வேகம் 9834 எம்.பி.பி.எஸ் (9834 mbps) என்று கூறப்படுகிறது.

நொடியில் டவுன்லோட்

இதன் மூலம் 4K வீடியோவை எளிதில் பதிவிறக்கம் செய்யலாம் என்றும் 2Gb சைஸ் கொண்ட நான்கு படங்களை ஒரே நொட்டியில் பதிவிறக்கம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் பதிவேற்ற வேகம் 1008 Mbbs ஆக உள்ளது என்றும் இந்த 10G இணையசேவை மக்களின் வாழ்வியலை மாற்றும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல நாடுகளில் தற்போது தான் 5G சேவையே அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், சீனாவில் 10ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.