மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாளை ஒட்டி, தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் நேற்று காமராஜர் பிறந்த நாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில், ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஆட்டம், பாட்டத்துடன் வெகு விமர்சையாக காமராஜரின் பிறந்தநாளை கொண்டாடி அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதற்கிடையில், காமராஜர் பிறந்தநாள் விழாவை கொண்டாட வந்த சில இளைஞர்கள் உற்சாக மிகுதியில் அந்த வழியாக சென்ற அரசு பேருந்தின் மீது ஏறி ஆட்டம் போட்டனர். ஆனால், சற்றும் சளைக்காத அரசு பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் அங்கும் இங்குமாய் வளைத்தபடி ஓட்டி சென்றார்.
இதனால், பேருந்து மேல் ஏறி நின்று ஆட்டம் போட்ட அந்த இளைஞர்கள் பயத்தில் பேருந்தின் மீது படுத்துகொண்டான். ஒரு கட்டத்தில் பேருந்தை நிறுத்துங்கள், நிறுத்துங்கள் என இளைஞர்கள் கதறினர். இதனால், சற்று தொலைவில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர், அந்த இளைஞர்களை எச்சரித்து கீழே இறக்கி விட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையடுத்து, அரசு பேருந்தின் மீது ஏறி ஆட்டம் போட்ட இளைஞர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.