தமிழ்நாடு

நாங்கள் உதயநிதியின் தொண்டர்கள்- அமைச்சர் ரகுபதி பேச்சு

எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதிக்கு எதிராக செயல்படவில்லை. இருவரும் இறக்கும் வரை நண்பர்களாக இருந்தவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும் என அமைச்சர் ரகுபதி பேச்சு

 நாங்கள் உதயநிதியின் தொண்டர்கள்- அமைச்சர் ரகுபதி பேச்சு
அமைச்சர் ரகுபதி
புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அருகே உள்ள அரங்கில் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு மாத்திரைகளை வழங்கிய இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “எம்ஜிஆர் கலைஞர் கருணாநிதிக்கு எதிராக செயல்படவில்லை. இருவரும் இறக்கும் வரை நண்பர்களாக இருந்தவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். சில கருத்து வேறுபாடு காரணமாக அவர் அதிமுக என்ற கட்சியை தொடங்கினாரே தவிர, பார்ப்பனியர்களுக்கு எதிராகவோ மற்ற கருத்துக்களுக்கு எதிராகவோ அவர் தொடங்கவில்லை.

பீகார் விவகாரம்

பீகார் மாநிலத்தில் என்ன நடந்தது என்று அனைவருக்கும் தற்போது தெரியும். வாக்காளர் பட்டியலுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது. உச்சநீதிமன்றம் அது குறித்து விளக்கங்கள் கேட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நாங்கள் வாக்காளர் பட்டியலின் ஒவ்வொரு பகுதியையும் தற்போதைய ஆராய்ந்து வருகிறோம். ஒவ்வொரு வீட்டிலும் யார் யார் இருக்கிறார்கள் என்பதை எங்களது தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று அறிந்து வைத்துள்ளனர். அதனால் புதிதாக யாரையாவது கொண்டு வந்த புகுத்தினால் அவர்களைத் தூக்கிக் கொண்டு வந்து நிறுத்தி விடுவோம். அவருக்கும் இந்த வீட்டிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. கடந்த வாரம் கூட அந்த வீட்டிற்கு சென்றும் இவர் அந்த வீட்டில் இல்லை. வேண்டுமென்று புதிதாக இவரை சேர்த்துள்ளனர். சக்தி திமுகவுக்கு உண்டு, திமுக தொண்டர்களுக்கு உண்டு.


போலி வாக்காளர்கள் இல்லாமல் இருக்க முயற்சி

இங்கு உள்ள ஒவ்வொரு வாக்காளர்களையும் நேரில் சந்தித்து இருக்கின்ற ஒரே இயக்கம் திமுக. வாக்காளர் பட்டியல் தற்பொழுது கையில் இருக்கிறது. கையில் இருக்கின்ற பட்டியலை சரி பார்த்து யார் யார் புதிய வாக்காளர்கள் யார் யார் வெளிநாட்டில் வாக்காளர்களாக உள்ளனர் யார், யார் போலியான வாக்காளர்கள் என்ற பட்டியலை எடுத்து வருகின்றோம். வாக்காளர் பட்டியல் திருத்தம் வருகின்றபோது தேர்தல் ஆணையத்தில் அதை சமர்ப்பித்து அப்போது நிச்சயமாக தமிழ்நாட்டில் ஒரு போலி வாக்காளர்கள் கூட இல்லாத வகையில் இருக்க திமுக முயற்சி எடுக்கும்.

அதை மீறி வெளி வாக்காளர்களை அங்கு இருக்கக்கூடிய தேர்தல் ஆணையம் பாஜகவின் கூட்டணியில் முக்கியமாக இருப்பது தேர்தல் ஆணையம் தான். அதற்குப் பிறகுதான் அதிமுக மற்ற கட்சிகள் எல்லாம். அதனால் பாஜகவின் முதல் கூட்டணி கட்சியான தேர்தல் ஆணையம் தவறு செய்தால் உச்ச நீதிமன்றத்திற்கு சென்று அதற்காக போராடக்கூடிய சக்தி திமுகவுக்கு கொண்டு. உண்மைகளை எடுத்துரைத்து உண்மையான வாக்காளர் பட்டியலை வைத்து தான் தேர்தல் நடத்துவோம்.

உதயநிதியின் தொண்டர்கள்

அதிமுகவில் ஒரு பொறுப்பில் இருந்தவர், நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினராக இருந்த அன்வர் ராஜா திமுகவுக்கு வருகிறார். வருகிறபோது இலக்கிய அணியின் தலைவராக இருந்தவர் இறந்துவிட்ட காரணத்தினால், அந்த இடம் காலியாக இருந்தது. அப்போது அந்த இடத்திற்கு யாரை நியமிக்க வேண்டும் என்கின்ற அதிகாரம் எங்களுடைய கட்சியின் தலைவருக்கு தான் உள்ளது.

திமுகவில் வந்து சேர்ந்து விட்டால் அவர் திமுககாரன். அதில் புதுசு பழசு அதிமுகவில் இருந்து வந்தவர்கள் காங்கிரஸிலிருந்து வந்தவர்கள் வேற கட்சியிலிருந்து வந்தவர்கள் ஏன் பிரிவுப்படுத்தி பார்க்கிறீர்கள். நாங்கள் அனைவரும் கலைஞர் கருணாநிதியின் தொண்டர்கள். மு.க. ஸ்டாலின் தொண்டர்கள். உதயநிதியின் தொண்டர்கள்.

வழக்குப்பதிந்து உரிய நடவடிக்கை

தமிழ்நாட்டில் எங்கும் கஞ்சா உற்பத்தியாகவில்லை. சாராயமும் காய்ச்சப்படவில்லை. வேறு எங்கிருந்தோ வருகிறது. வர்றதை தடுக்க வேண்டியது மத்திய அரசு. வெளி மாநிலங்களிலிருந்து வருகிறது. மாநிலம் விட்டு மாநிலம் வரும்பொழுது அதனை தடுக்க மத்திய அரசு தவறி வருகிறது. மத்திய அரசை குற்றச்சாட்டு சொல்வதற்கு இவர்களுக்கெல்லாம் பயம். நாளைக்கு அமலாக்கத்துறை வந்து விடுமோ, வருமானவரித்துறை வந்து சோதனை நடத்தி வீட்டில் உள்ளதை தூக்கி சென்று விடுவார்களோ என்று பயம். எங்களைப் பொறுத்தவரை எங்கள் கவனத்திற்கு வரும் பொழுது போதைப்பொருளை தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்து அவர்கள் மீதும் வழக்குப்பதிந்து உரிய நடவடிக்கையை தமிழ்நாடு முதலமைச்சரின் காவல்துறை செய்து வருகிறது.

மணலுக்காக உயர் நீதிமன்றத்தில் ஒன்று இரண்டு அனுமதிகள் தரவேண்டியது இருக்கிறது. அதை விரைவில் இரண்டு மூன்று நாட்களில் கிடைத்துவிடும். கிடைத்த பிறகு, அரசு அதைப்பற்றி முடிவு செய்யும்.

அது ஒரு கப்ஸா கதை

தமிழ்நாட்டில் வலுவான கூட்டணியாக திமுக இருக்கிறது. அதை எதிர்த்து வலுவான கூட்டணி அமைவதற்கான வாய்ப்பு நிச்சயம் இல்லை. பேருக்காக தங்களிடம் இருக்கக்கூடிய ஒன்று இரண்டு பேரும் தங்களை விட்டு போய்விடக்கூடாது என்பதற்காக நாங்கள் வலுவான கூட்டணி அமைப்போம் என்று ஒரு கதையை விட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அது ஒரு கப்ஸா கதை.

கொலைகளை கண்டித்து அதிமுக போராட உரிமை கிடையாது. கொலைகளில் உரியவர்களை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். கொலைகளில் எல்லாம் ஆட்சியாளர்களுக்கு தெரிந்து சுட்டுக்கொன்ற சம்பவங்களும் உண்டு. சொன்னால் திரும்பத் திரும்ப தூத்துக்குடி சாத்தான்குளத்தை சொல்கிறீர்கள் என்று அவருக்கு கோபம் வரும். அதுபோன்ற சம்பவம் எங்கள் ஆட்சியில் இல்லை. அதைத்தான் நாங்கள் சொல்ல முடியும்.

இபிஎஸ் மீது சாடல்

நீதி அரசர் அருணா ஜெகதீசன் அறிக்கை அடிப்படையில் நீதிமன்றம் வழிகாட்டுதலில் அதற்கான அதிகாரிகளை நியமித்து என்னென்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கெல்லாம் அழைப்பானை கொடுத்து விசாரித்து இந்த குற்றச்சாட்டுகள் உங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கிறது என்று சொல்லப்பட்டு வருகிறது. அதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து நடந்து வருகிறது.அது மூடி மறைக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.