தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாவட்டந்தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்களைச் சந்தித்து உரையாற்றி வருகிறார்.
அந்த வகையில், இன்று வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் (VinFast) நிறுவனம் ரூபாய் 16 ஆயிரம் கோடியில் ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்கத் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நிறைவு பெற்ற நிலையில் இன்று இந்த ஆலையைத் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சமீபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முதல் முறையாக அரசு நிகழ்வில் கலந்துகொள்ள இன்று தூத்துக்குடிக்கு பயணம் மேற்கொண்டு, வியட்நாமைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் (VinFast) நிறுவனத்தின் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அவர் திறந்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2024-ல் இந்தத் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தற்போது, ₹1,119.67 கோடி செலவில் 114 ஏக்கர் பரப்பளவில் முதற்கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்தத் தொழிற்சாலையில் ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
காலை 10 மணியளவில் தூத்துக்குடி வந்த முதலமைச்சர், வின்ஃபாஸ்ட் ஆலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று தொழிற்சாலையைத் திறந்து வைத்தார். இந்நிகழ்வில், உற்பத்தி செய்யப்பட்ட முதல் காரில் அவர் கையெழுத்திட்டு, விற்பனையையும் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் வின்ஃபாஸ்ட் நிறுவன நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த ஆலைமூலம் VF 6 மற்றும் VF 7 ஆகிய மாடல் கார்கள் விற்பனைக்கு வர உள்ளன.
தமிழ்நாடு அரசுடன் வின்ஃபாஸ்ட் நிறுவனத்துடன் ₹16,000 கோடி மதிப்பிலான முதலீட்டுக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.