புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைக் கண்டித்து கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், இந்த விவகாரத்தில் 3 பேருக்கு தொடர்புள்ளதாக நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்த நிலையில் வேங்கைவயல் பகுதியைச் சேர்ந்த சுதர்சன், முத்துக்கிருஷ்ணன், முரளிராஜா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
வேங்கை வயல் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த காவல்துறையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது. அதன் பின்னர் இவ்வழக்கு 2023ம் ஆண்டு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது.
வழக்கமான சட்ட நடைமுறைகளின்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மேலும் அவகாசம் கோரி சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை மாவட்ட எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று திடீர் திருப்பமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வேங்கை வயல் வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் குற்றம் சாட்டப்பட்டு குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்துள்ள முரளி ராஜா, சுதர்சன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் தங்களுடைய வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நீதித்துறை நடுவர் நீதிமன்றம் இரண்டில் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை வரும் மே மாதம் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தம் கிடையாது எனவே, இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று மூன்று பேரும் தனித்தனியாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று மனு மீதான விசாரணை நடைபெற்றது . இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி அற்புதவான்ன் வழக்கை மே மாதம் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.