பருவதமலையேற்றம்
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த தென்மாதிமங்கலத்தில் பருவதமலை அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 4560 அடி உயரம் கொண்ட பருவத மலையில் தினந்தோறும் பக்தர்களும் பௌர்ணமி அமாவாசை பிரதோஷம் போன்ற நாட்களில் ஏராளமான பக்தர்களும் கடினமான மலைப்பாதைகளைக் கொண்ட பருவதமலை மீது ஏறி சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
அதன்படி சென்னை தாம்பரம் பகுதியில் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட ஆன்மீக பக்தர்கள் குழுவாக இணைந்து இன்று காலை 5 மணி அளவில் பருவதமலை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளனர். அப்போது பருவதமலையின் உச்சிப் பகுதி அருகே சென்ற பொழுது மூச்சுத்திணறல் ஏற்பட்டு பிரகாஷ் வயது (30) மயங்கி விழுந்துள்ளார்.
சென்னை பக்தர் உயிரிழப்பு
உடன் வந்த ஆன்மீக பக்தர்கள் அவருக்கு பல்வேறு முதல் உதவி சிகிச்சைகளை அளித்துள்ளனர். பிரகாஷ் மயக்கம் தெளியாமல் அப்படியே இருந்துள்ளார். அவர் மயங்கி விழுந்தவுடன் அவருக்கு அளிக்கக்கூடிய முதல் உதவி சிகிச்சைகள் குறித்தும் உடன் வந்த ஆன்மீக பக்தர்கள் வீடியோ பதிவு செய்துள்ளனர்.உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு மலையடிவாரத்திற்கு 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.
மயங்கிய நிலையில் இருந்த பிரகாஷை உடன் வந்த நபர்கள் அனைவரும் தூக்கிக்கொண்டு மலையிலிருந்து கீழே இறக்கி உள்ளனர். அடிவாரப் பகுதிக்கு வந்ததும் 108 ஆம்புலன்ஸில் வந்த நபர்கள் பிரகாஷ் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கடலாடி காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீஸ் விசாரணை
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கடலாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த பிரகாஷின் உடலை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கடலாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பருவத மலையில் ஆன்மீக பயணம் மேற்கொண்டு மலைமீது மூச்சு திணறல் காரணமாக ஆன்மீக பக்தர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.