முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஆகஸ்ட் மாதம் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. குறிப்பாக, வழக்குகளைக் கண்டறியவும், குற்றவாளிகளைக் கைது செய்யவும், பாரம்பரியச் சொத்துக் குற்றங்கள் மற்றும் கணினிசார் குற்றங்கள், பொருளாதாரக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்காகவும் புலனாய்வு அதிகாரிகள் விமானத்தில் பயணம் மேற்கொள்ள, தமிழக டிஜிபிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த அரசாணையை அடிப்படையாகக் கொண்டு, தற்போது தமிழக டிஜிபி அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இந்த உத்தரவின்படி, பிற மாநிலங்களில் வழக்கு விசாரணைக்காக விமானம் மூலம் செல்ல அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம்.
இந்த நடவடிக்கை, தமிழகத்தில் குற்றங்களைச் செய்துவிட்டு வெளிமாநிலங்களுக்குத் தப்பிச் செல்லும் குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய உதவும். குறிப்பாக, சைபர் குற்றங்கள் மூலமாக பொதுமக்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து கொள்ளையடிக்கப்படும் பணத்தை 24 முதல் 48 மணி நேரத்தில் முடக்கி மீட்கும் நடவடிக்கைகளுக்கு இந்த விமானப் பயணம் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், பொதுமக்களின் பணத்தை விரைந்து மீட்கவும், குற்றவாளிகளைத் தப்பிக்கவிடாமல் உடனடியாகப் பிடிக்கவும் காவல்துறைக்கு மேலும் அதிகாரம் கிடைத்துள்ளது.