குற்றவாளிகளை விமானத்தில் சென்று கைது செய்யலாம்: தமிழக டிஜிபி சுற்றறிக்கை!
வழக்கு விசாரணை, குற்றவாளிகளைக் கைது செய்தல் மற்றும் சொத்துக்களை மீட்பதற்காக, புலனாய்வு அதிகாரிகள் பிற மாநிலங்களுக்கு விமானத்தில் செல்லலாம் என தமிழக பொறுப்பு டிஜிபி ஜி. வெங்கடராமன் காவல்துறை அதிகாரிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழக அரசின் அரசாணையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.