தமிழ்நாடு

தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம்!

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் உறவினர்களின் கண்ணீருக்கு மத்தியில் அவரவர் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம்!
தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம்!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை அடுத்து ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே தாக்குதல் நடத்திய 4 பயங்கரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனையடுத்து உயிரிழந்தவர்களின் உடல்கள் விமானம் மூலம் அவர், அவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதனையடுத்து உத்தரபிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த சுபம் திவேதியின் உடலுக்கு அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த சந்தோஷ் ஜக்தலேவின் உடலுக்கு NCP தலைவர் சரத் பவார், நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர், உறவினர்கள் மத்தியில் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

அதேபோல் ஒடிசாவைச் சேர்ந்த பிரசாந்த் சத்பதியின் உடலுக்கு அம்மாநில முதலமைச்சர் மோகன் சரண் சாஜி நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதனைத்தொடர்ந்து அவரின் குடும்பத்தினருக்கு அரசு நிதி உதவி வழங்கும் எனவும் தெரிவித்தார்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த தினேஷ் மிரானியாவின் உடல், இறுதிச் சடங்குகளுக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. இதனையடுத்து உறவினர்கள் மத்தியில் உடல் தகனம் செய்யப்பட்டது.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, அட்டாரி - வாகா எல்லை மூடப்படுவதாகவும், பாகிஸ்தான் உடனான சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்ய உள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், நாடு முழுவதும் சுற்றுலாத்தளங்களில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.