தமிழ்நாடு

தமிழ்நாட்டில் 7 நாட்கள் மழை கொட்டப்போகுது.. சென்னையில் எப்படி? முழு விவரம்!

தமிழக கடலோரப்பகுதிகளில் 15.09.2024 மற்றும் 16.09.2024 வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தமிழ்நாட்டில் 7 நாட்கள் மழை கொட்டப்போகுது.. சென்னையில் எப்படி? முழு விவரம்!
Tamilnadu Rain

சென்னை: தமிழ்நாட்டில் 7 நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கடந்த 24 மணி நேரத்தில்  தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  மழை பெய்துள்ளது. புதுவையில்  வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):   காரைக்குடி (சிவகங்கை) 3; ஜெயம்கொண்டம் (அரியலூர்), சின்னக்கல்லார்  (கோயம்புத்தூர்), நடுவட்டம் (நீலகிரி), செந்துரை ARG (அரியலூர்), சோலையார் (கோயம்புத்தூர்), தேவகோட்டை (சிவகங்கை) தலா  1. 

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 15.09.2024 (இன்று) முதல் 21.09.2024 வரை தமிழகத்தில் ஓரிரு  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். தமிழகத்தில்  அடுத்த 2 தினங்களுக்கு (15.09.2024 மற்றும் 16.09.2024)  அதிகபட்ச வெப்பநிலை  ஓரிரு இடங்களில் 2 டிகிரி-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.  

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை,  அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் லேசான மழை  பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.

தமிழக கடலோரப்பகுதிகளில் 15.09.2024 மற்றும் 16.09.2024 வரை மன்னார்  வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை  ஒட்டிய  குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

17.09.2024 முதல் 19.09.2024 வரை வரை மன்னார்  வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை  ஒட்டிய  குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  17.09.2024 முதல் 19.09.2024 வரை வரை தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35  முதல் 45  கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

15.09.2024 மற்றும் 16.09.2024 ஆகிய நாட்களில் தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35  முதல் 45  கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.