தமிழ்நாடு

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும்-கனிமொழி எம்.பி.,

எனக்கு மத நம்பிக்கை கிடையாது. நான் கோவில் நிலத்தில் இடம் கேட்டால் கொடுக்க முடியுமா? வக்ஃபு போர்டில் எதற்கு இஸ்லாமியர் இல்லாத ஒருவரை நியமிப்போம் என்பது ஏற்புடையதல்ல.

  நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும்-கனிமொழி எம்.பி.,
தாமரை எந்த காலத்தில் மலராது

திருவாரூர் தெற்கு வீதியில் தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபையின் சார்பில் வக்பு வாரிய திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், “பா.ஜனதா கட்சிக்கு மதம் என்பது ஒரு கருவி. மக்களை பிளவுப்படுத்தி ஆட்சியில் அமருவதற்கான ஆயுதம். இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள் என யார் மீதும் அக்கரை இல்லாத ஆட்சி தான் மத்தியில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தாமரை என்பது எந்த காலத்தில் மலராது. அடிப்படை உரிமைகளை பாதிக்கின்ற வகையில், வக்ஃபு சட்ட திருத்த மசோதா அமைந்துள்ளது. 12 ஆண்டுகள் ஒருவர் வக்ஃபு போர்டு நிலத்தில் குடியிருந்தால் அந்த நிலம் அவருக்கு சொந்தம் என சொல்லி விட முடியும். இது எந்தவிதத்தில் நியாயம் என்பது புரியவில்லை.

எனக்கு மத நம்பிக்கை கிடையாது. நான் கோவில் நிலத்தில் இடம் கேட்டால் கொடுக்க முடியுமா? வக்ஃபு போர்டில் எதற்கு இஸ்லாமியர் இல்லாத ஒருவரை நியமிப்போம் என்பது ஏற்புடையதல்ல. அதேபோல் தேவஸ்தான போர்டு நிர்வாகத்தில் இந்து இல்லாத ஒருவரை நியமிக்க ஏற்று கொள்வீர்களா? அரசு நினைத்தால், கோவில் சொத்தையோ, வக்பு போர்டு சொத்தையா எடுத்து கொள்ள முடியாது. ஆனால் தற்போது சட்ட திருத்தம் மூலம் வக்ஃபு போர்டு சொத்தினை அரசு எடுத்து கொள்ள முடியும்.

நீட் தேர்வில் விலக்கு

இந்த சொத்தை எடுத்து அதானி, அம்பானிக்கு இரு கார்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பார்கள். இதன் மூலம் இஸ்லாமிய சொத்துக்களை பிடுங்க நினைக்கின்றனர். இஸ்லாமிய குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட உதவித்தொகை நிறுத்திய பா.ஜனதா ஆட்சி தான். மதத்தால் மக்களை பிளவுப்படுத்தி தொடர்ந்து வெறுப்பு அரசியலை விதைத்தப்பது மத்தியில் ஆளும் பா.ஜனதா ஆட்சி.

அது நமது நாட்டை துண்டாக்க கூடிய ஆட்சி பாஜகவுடையது. நாடு முழுவதும் ஒரே மொழி,ஒரே தேர்தல், ஒரே சிந்தனை, ஒரே அரசியல் கோட்பாடு தான் பா.ஜனதா கட்சியின் கொள்கை. வக்ஃபு சட்ட திருத்த மசோதவிற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு முதல்-அமைச்சர் குரல் கொடுத்துள்ளார்.இந்த குரல் என்பது டெல்லியில் ஆட்சியை நிச்சயம் மாற்றும்” என பேசினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி., “தமிழக ஆளுநருக்கு எதிராக நீண்ட காலமாக நடைபெற்று வந்த சட்ட போராட்டத்திற்கு உச்சநீதிமன்றத்தில் நீதி கிடைத்துள்ளது. அதேபோல நீட் தேர்வு விவகாரத்திலும் உச்சநீதிமன்றத்தில் தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என தெரிவித்தார்.