நடிகர் சூர்யாவின் தனி பாதுகாவலரிடம் ரூ.42 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, அவரது வீட்டு வேலைக்காரப் பெண் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட கும்பலை போலீசார் மூன்று மாத தேடலுக்குப் பிறகு அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசையில் இந்த மோசடிக் கும்பல் 500-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.2.15 கோடி வரை சுருட்டியிருப்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அந்தோணி ஜார்ஜ் பிரபு, ஆயுதப் படை காவலராகப் பணியாற்றி வரும் நிலையில், கடந்த சில மாதங்களாக நடிகர் சூர்யாவின் தனி பாதுகாவலராக இருந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்த அவர், நடிகர் சூர்யா வீட்டில் வேலை பார்த்து வந்த தி.நகரைச் சேர்ந்த சுலோச்சனா மற்றும் அவரது குடும்பத்தினர், குறைந்த விலையில் தங்க காயின்களைத் தருவதாகக் கூறி ரூ.42 லட்சம் மோசடி செய்து விட்டதாகத் தெரிவித்திருந்தார்.
புகாரின் பேரில் போலீசார் சுலோச்சனா மற்றும் அவரது குடும்பத்தினரைத் தேடியபோது, அவர்கள் செல்போன்களை அணைத்துவிட்டுத் தலைமறைவானது தெரியவந்தது. இதையடுத்து, சுமார் 100-க்கும் மேற்பட்ட செல்போன் எண்களை ஆய்வு செய்து, சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு, திருவள்ளூரில் பதுங்கி இருந்த சுலோச்சனா (68), அவரது மகன்கள் பாலாஜி, பாஸ்கர் மற்றும் சுலோச்சனாவின் சகோதரி விஜயலட்சுமி ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சிறு வயதிலிருந்தே வறுமையில் வாடிய சுலோச்சனாவின் மகன்கள், சில வருடங்களுக்கு முன்பு நடிகர் சூர்யாவின் வீட்டில் வேலைக்குச் சேர்ந்த தனது தாயுடன் அங்கு வந்தபோது, சூர்யாவின் ஆடம்பரமான வாழ்க்கை முறையைக் கண்டு தாங்களும் அப்படி வாழ வேண்டும் என்ற ஆசையில் இந்த மோசடியைத் திட்டமிட்டுள்ளனர். முதலில் தீபாவளி பண்டு நடத்தி சிறிய அளவில் தொடங்கி, பின்னர் ஐந்தாயிரம் ரூபாய் செலுத்தினால் ஒரு மாதத்தில் ஒரு கிராம் தங்க காயின் வழங்கப்படும் என்றும், ரூ.6,500 செலுத்தினால் வாரத்தில் ஒரு கிராம் தங்க காயின் வழங்கப்படும் என்றும் கூறி மக்களிடம் ஆசை வார்த்தை கூறி உள்ளனர்.
இந்த மோசடி கும்பல், அண்ணா நகரில் 22 லட்சம், அயனாவரத்தில் 37 லட்சம் என பல்வேறு இடங்களில் இதே பாணியில் மொத்தம் ரூ.2.15 கோடி வரை மோசடி செய்துள்ளது. அந்தப் பணத்தைக் கொண்டு ஆடம்பரமாக உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. விசாரணையில், சூர்யாவின் பாதுகாவலர் அந்தோணியும் முதலில் சந்தேகப்பட்டதாகவும், பின்னர் சுலோச்சனாவின் மகன்கள் அவரை நம்பவைத்து, தந்தையின் மருத்துவச் செலவுக்காக வைத்திருந்த ரூ.1 லட்சத்தை முதலில் முதலீடு செய்ய வைத்ததாகவும் தெரியவந்துள்ளது. அதற்கான தங்க காயின்கள் கிடைத்த பிறகு, தனது மனைவியின் நகைகளை விற்றும், கடன் வாங்கியும் ரூ.42 லட்சத்தை அவர் செலுத்தி ஏமாந்து போயுள்ளார்.
போலீசார் சுலோச்சனாவின் வீட்டில் சோதனை மேற்கொண்டபோது பணத்திற்குரிய ரசீதுகள் மட்டுமே கிடைத்துள்ளதால், பணத்தை புதைத்து வைத்திருக்கலாம் அல்லது யாரிடமாவது கொடுத்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள பிற நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.