தொலைக்காட்சி சீரியல் மற்றும் இந்தியன்-2 மற்றும் மழை பிடிக்காத மனிதன் போன்ற பல்வேறு படங்களில் துணை நடிகையாக நடித்து பிரபலமானவர் ஞானலிலா என்ற ஸ்ரீ அஸ்வினி தங்கராஜ். இவர் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்து வருகிறார். தொடர்ந்து சமூக வலைதள பக்கத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் பின் தொடரும் வகையில் செயல்பட்டு வருகிறார். சமுதாயத்தில் பொதுமக்களுக்கு நடக்கும் பிரச்சனைகள் குறித்து அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
ஆபாச ஆடியோ மிரட்டல்
இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மறுவரசன் என்ற நபர் துணை நடிகை அஸ்வினி தங்கராஜ் இன்ஸ்டாகிராம் குறுஞ்செய்தி பக்கத்தில் வீடியோ கால் செய்தும் ஆடியோ மூலமாக ஆபாசமாக பேசி மிரட்டிய காட்சிகளை வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடபழனி தனியார் மருத்துவமனை அருகே பொது இடங்களில் மது அருந்துவது தொடர்பாக துணை நடிகை அஸ்வினி தங்கராஜ் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவு வெளியிட்டதற்காக துணை நடிகை அஸ்வினி மீது ஆத்திரத்தில் ஆபாசமாக பேசி மிரட்டி ஆடியோ அனுப்பியது தெரியவந்துள்ளது.
துணை நடிகை புகார்
துணை நடிகை அஸ்வினி தங்கராஜ் வெளியிட்ட இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரவி வருகிறது. இதுகுறித்து துணை நடிகை அஸ்வினி தங்கராஜ் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளார்.
சமூகத்தில் நிலவும் அவலங்களை வீடியோவாக வெளியிடும் பெண்கள் மீது இதுபோன்ற தாக்குதல் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் போலீசில் புகார் அளித்ததாக துணை நடிகை தெரிவித்துள்ளார்.