தமிழ்நாடு

2100ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் கடல் மட்டம் உயர்வு: சென்னை உட்பட 14 மாவட்டங்களுக்கு ஆபத்து!

தமிழகத்தில் 2100ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டம் உயரும் என்று அண்ணா பல்கலைக்கழக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் மட்டம் உயர்வால் சென்னை மிகப்பெரிய ஆபத்தை சந்திக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2100ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் கடல் மட்டம் உயர்வு: சென்னை உட்பட 14 மாவட்டங்களுக்கு ஆபத்து!
2100ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் கடல் மட்டம் உயர்வு: சென்னை உட்பட 14 மாவட்டங்களுக்கு ஆபத்து!
தமிழகத்தில் 2100ஆம் ஆண்டுக்குள் கடலோரப் பகுதிகளில் கடல் மட்டம் குறிப்பிடத் தக்க அளவில் உயரும் அபாயம் இருப்பதாகச் சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், சென்னை மிகப்பெரிய ஆபத்தைச் சந்திக்கும் எனவும், மொத்தம் 14 மாவட்டங்கள் பாதிக்கப்படலாம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஏ. ராமச்சந்திரன் தலைமையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் செயற்கைக்கோள் தரவுகள்மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு, 2100ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டம் சுமார் 78.15 செ.மீ வரை உயரும் என எச்சரிக்கிறது.

அதிகம் பாதிக்கப்படும் மாவட்டங்கள்

சென்னை: 52.16 செ.மீ

செங்கல்பட்டு: 52.33 செ.மீ

விழுப்புரம்: 52.40 செ.மீ

கடலூர்: 55.06 செ.மீ

நாகை: 52.79 செ.மீ

தஞ்சை: 54.07 செ.மீ

இதோடு, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களும் ஆபத்தில் உள்ளன.

கடல் மட்ட உயர்வால் தாக்கம் என்ன?

கடல் மட்டம் உயர்வால், நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், சென்னை போன்ற தாழ்வான கடலோரப் பகுதிகள் வெள்ள அபாயத்தை அதிகம் சந்திக்கக்கூடும். கடல் நீர் ஊடுருவல் காரணமாக விவசாயம், குடிநீர் வளங்கள் மற்றும் மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படலாமென ஆய்வு எச்சரிக்கிறது.

உலகளவில் காலநிலை மாற்றம் பல்வேறு சவால்களை உருவாக்கி வரும் நிலையில், தமிழகமும் அதிலிருந்து விதிவிலக்கல்ல என்பதையும் இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.