தமிழ்நாடு

‘ஆபரேஷன் சிந்தூர்’: தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல்...பிரபலங்கள் வரவேற்பு

போராளிகளின் போர் தொடங்கியது என நடிகர் ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்.

 ‘ஆபரேஷன் சிந்தூர்’: தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல்...பிரபலங்கள் வரவேற்பு
ஆபரேஷன் சிந்தூருக்கு பிரபலங்கள் வரவேற்பு
பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல்

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து மத்திய அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தது.

இந்த நிலையில், பயங்கரவாத தாக்குதலுக்கு வழிவாங்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் பயங்கரவாதிகள் உள்பட 70 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்திய ராணுவத்தின் தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் என்னும் பெயரில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்திய பிரபலங்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

பிரபலங்கள் வரவேற்பு

நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “போராளிகளின் போர் தொடங்கியது. இலக்கு முடியும் வரை நிறுத்த வேண்டாம். முழு தேசமும் உங்களுடன் உள்ளது” என பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை டேக் செய்துள்ளார். மேலும் ஜெய்ஹிந்த் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் நடிகரும், தவெக தலைவருமான விஜய் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட்!” என பதிவிட்டுள்ளார். நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்பு, “இந்தியாவுக்கான நியாயம் கிடைத்துள்ளது. நமது வீரர்களின் செயலால் பெருமைப்படுகிறேன்” என தெரிவித்துள்ளார். இதேபோல் பல்வேறு பிரபலங்களும் இந்திய ராணுவத்தின் தாக்குதலுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.