நீட் தேர்வு எழுதிய திருநங்கை
கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் திருநங்கை இந்திரஜா(22). இவர் கோவை ராம் நகர் பகுதியில் உள்ள அரசு உதவிப்பெறும் பள்ளியில் 12ம் வகுப்பு வரை படித்துள்ளார். இதைத்தொடர்ந்து கோவையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பிஎஸ்சி வேதியியல் படித்து வந்தார். ஆனால் டாக்டர் ஆக வேண்டும் என்பதற்காக கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு நீட் தேர்வுக்கு தயாராகி உள்ளார்.
கல்வி காப்பாற்றும் என நம்பிக்கை
கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய இந்திரஜா தேர்ச்சி அடையாத நிலையில், மீண்டும் இந்தாண்டு தேர்வு எழுதி உள்ளார். மேலும் இந்தாண்டு தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுதும் ஒரே திருநங்கை தான் என கூறினார். மேலும் தங்களை எதிர்காலத்தில் கல்வி மட்டுமே காப்பாற்றும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்துஜா, “யாருடைய துணையும் இன்றி தனியாக தங்கி நீட் தேர்வுக்கு தயாராகி வருகிறேன். சின்ன வயதில் இருந்தே டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது.அதனால் நான் டாக்டர் ஆகி எங்களது சமூகத்திற்கு உதவுவேன். மேலும் திருநங்கைகள் அனைத்து துறைகளிலும் வர வேண்டும். ஏ.ஐ உள்ளிட்ட அனைத்து துறைகளையும் படிக்க வேண்டும் என சக திருநங்கைகளுக்கு கூறி வருகிறேன்” என தெரிவித்தார்.