தமிழ்நாடு

பரோலில் வந்த சிங்கப்பூர் தீவிரவாதி... விமான நிலையத்திலேயே கைது செய்த என்.ஐ.ஏ.

பரோலில் தமிழகத்திற்கு வந்த சிங்கப்பூர் தீவிரவாதியிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பரோலில் வந்த சிங்கப்பூர் தீவிரவாதி... விமான நிலையத்திலேயே கைது செய்த என்.ஐ.ஏ.
சிங்கப்பூர் தீவிரவாதியிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

சிங்கப்பூர் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருப்பவர் செய்யது இப்ராஹிம். இவர் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர். சொந்த ஊர் ராமநாதபுரம். சிறிது வயதிலேயே சிங்கப்பூர் நாட்டிற்கு குடிபெயர்ந்து விட்டார்.

இவர் ஜெமா இஸ்லாமியா (Jemaah Islamiyah) என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்பதால் சிங்கப்பூர் அரசு செய்யது இப்ராஹிமை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 2008ஆம் ஆண்டில் இருந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில் அவரது தாயார் ராமநாதபுரத்தில் வசித்து வருவதாலும், அவருக்கு வயது 90 வயது என்பதாலும் உடல் பாதிக்கப்பட்டு இருப்பதாலும் அவரை சந்திக்க செய்யது இப்ராஹிம் சிங்கப்பூர் அரசிடம் அனுமதி கேட்டதாக கூறப்படுகிறது.

அதனால் அந்த அரசு ஒரு மாதம் நிபந்தனையோடு பரோல் வழங்கியதாக தெரிகிறது. அதனை வைத்து செய்யது இப்ராஹிம் விமான மூலம் சென்னை வந்துள்ளார். அப்போது சிங்கப்பூர் போலீசாருடன் கண்காணிப்பிலேயே வந்துள்ளதாக தெரிகிறது. 

சென்னை வந்தவுடன் அவரை என்ஐஏ அதிகாரிகள் விசாரணைக்காக விமான நிலையத்தில் வைத்தே பிடித்து சென்றனர். கடந்த 3 நாட்களுக்கும் மேலாக விசாரணை நடத்தி என்ஐஏ அதிகாரிகள் கண்காணிப்போடு ராமநாதபுரம் அழைத்து சென்றுள்ளனர். தமிழக காவல்துறையும் அவரிடம் விசாரணை நடத்தி உள்ளது.

ஜெமா இஸ்லாமியா (Jemaah Islamiyah) தீவிரவாத அமைப்பினர் ஜகார்த்தாவில் உள்ள பிலிப்பைன்ஸ் தூதரகம் குண்டுவெடிப்பு,  ஜகார்த்தா பங்குச்சந்தை குண்டுவெடிப்பு, இந்தோனேசியா குண்டுவெடிப்பு, 2002 பாலி குண்டுவெடிப்பு, 2003 மேரியட் ஹோட்டல் குண்டுவெடிப்பு, 2004 ஜகார்த்தா தூதரகம் குண்டுவெடிப்பு, 2005 பாலி குண்டுவெடிப்பு, 2005 இந்தோனேசியாவில் கிறிஸ்தவ சிறுமிகளின் தலை துண்டிக்கப்பட்ட தாக்குதல்கள், 2009 ஜகார்த்தா போலீஸ் நிலையம் தாக்குதல் ஆகிய சம்வங்களில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.