தமிழ்நாடு

மனோஜ் பாண்டியன் வைத்த கோரிக்கை – முதலமைச்சர் சொன்ன பதில்

உறுப்பினரின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என இந்த பேரவையில் தெரிவித்துக்கொள்கிறேன் என முதலமைச்சர் பதில் அளித்தார்.

மனோஜ் பாண்டியன் வைத்த கோரிக்கை – முதலமைச்சர் சொன்ன பதில்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் பதில்

தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கேள்விநேரத்தின் போது, செளந்தரபாண்டியனுக்கு மணிமண்டபம் அமைத்திட வேண்டும் என எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் கோரிக்கை வைத்தார்.

இந்த நிலையில், எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியனின் கோரிக்கை குறித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, சட்டமன்ற உறுப்பினர் பால் மனோஜ் பாண்டியன், திராவிட இயக்கத்துனுடைய தலைவர்களில் ஒருவரான செளந்தரபாண்டியனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். உறுப்பினரின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என இந்த பேரவையில் தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.


அதிமுக எம்.எல்.ஏக்கள்

முன்னதாக யார் அந்த தியாகி என டாஸ்மாக் முறைகேடு குறித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவையில் கேள்விநேரத்தின்போது அதிமுக எம்.எல்.ஏ செங்கோட்டையன் மற்றும் ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்களான மனோஜ் பாண்டியன், ஐயப்பன் உள்ளிட்ட சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மட்டுமே இன்று அவையில் இருந்தனர். அதிமுக எம்.எல்.ஏக்களின் அமளி, சஸ்பெண்ட் என இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகள் பரபரப்புடன் இருந்தது.