தமிழ்நாடு

ஏ.ஐ. மூலம் ஆபாச வீடியோ – மணிப்பூர் பெண்ணை மிரட்டிய இளைஞர் கைது!

தன் ஆசைக்கு இணங்காததால் மணிப்பூரை சேர்ந்த பெண்ணை ஏ.ஐ மூலமாக டெக்னிக்கலாக நாடகமாடி ஏமாற்றிய சென்னை நொளம்பூரை சேர்ந்த மர்ம நபரை போலீசார் கைது செய்தனர்.

ஏ.ஐ. மூலம் ஆபாச வீடியோ – மணிப்பூர் பெண்ணை மிரட்டிய இளைஞர் கைது!
ஏ.ஐ. தொழில்நுட்பம் வழியாக ஆபாச வீடியோ – மணிப்பூர் பெண்ணை மிரட்டிய இளைஞர் கைது!
சென்னை நொளம்பூரில் உள்ள தனியார் அழகு சாதன நிலையத்தில் பணிபுரிந்து வந்த மணிப்பூரைச் சேர்ந்த பெண்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளனர். ஏ ஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மார்ப்பிங் முறையில் ஆபாசமாக வீடியோ உருவாக்கி, அதன் மூலம் மிரட்டும் மர்ம நபர் குறித்து வழக்கறிஞருடன் வந்து புகார் அளித்தனர். இந்த புகார் ஆனது சென்னை மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீசாரிடம் விசாரணைக்கு வந்தது.

போலீசார் விசாரணையில் பெண்ணின் ஆபாச வீடியோவை தனிப்பட்ட முறையில் மட்டுமல்லாது டெலிகிராம் whatsapp உள்ளிட்ட சமூக வலை தல பக்கத்தில் அனுப்பி மிரட்டிய நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் டெக்னாலஜியை பயன்படுத்தி விசாரிக்க ஆரம்பித்தனர். குறிப்பாக டெலிகிராமில் வீடியோ வெளியானதால் அந்த telegram பயன்படுத்திய செல்போன் எண் மூலமாக அந்த மர்ம நபரை போலீசார் அடையாளம் கண்டுபிடித்தனர். இருப்பினும் தன் இருப்பிடத்தை கண்டறிய முடியாதபடி தொழில்நுட்ப ரீதியாக தப்பித்த அந்த நபரை சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

கைது செய்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. கைதானவர் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஜோ ரிச்சர்ட் என்பது தெரிய வந்துள்ளது. இந்த வாலிபர் பூந்தமல்லியில் உள்ள தனியார் கல்லூரியில் எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ படித்துள்ளதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது .அது மட்டுமல்லாது சைபர் கிரைம் தொடர்பான பல்வேறு தொழில்நுட்பங்களையும் கற்று அறிந்துள்ளார் .இந்த அறிவை பயன்படுத்தி தான் ஏ ஐ தொழில்நுட்பத்தின் மூலம் மணிப்பூரைச் சேர்ந்த பெண்ணை தன் ஆசைக்கு இணங்குவதற்காக மிரட்டியது விசாரணையில் அம்பலமானது.

குறிப்பாக பகுதி நேரத்தில் Uber செயலியில் இருசக்கர வாகனத்தை ஒட்டிய ஜோ ரிச்சர்ட் நொளம்பூரில் அடிக்கடி மணிப்பூரைச் சேர்ந்த பெண்கள் வீட்டிற்கு செல்வதற்கு இருசக்கர வாகனத்தை புக் செய்வதை அறிந்து கொண்டுள்ளார். மீண்டும் மீண்டும் அவரை சம்பந்தப்பட்ட மணிப்பூரைச் சேர்ந்த பெண்ணை பிக்கப் செய்து வீட்டில் விடும் வகையில் உபர் செயலியை நுட்பமாக பயன்படுத்தி உள்ளார்.

ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்ட மணிப்பூரைச் சேர்ந்த பெண்ணிடம் ஜோ ரிச்சர்ட் நட்பாக பழக ஆரம்பித்துள்ளார். அவ்வாறு நெருங்கி பழகும் பொழுது உல்லாசமாக இருக்க அழைத்த போது மணிப்பூரைச் சேர்ந்த பெண் மறுத்துள்ளார். முன்னதாக பெண்ணிடம் பழகும் பொழுது அவரது இன்ஸ்டாகிராம் போட்டோக்கள் உள்ளிட்டவற்றை நட்பு ரீதியாக வாங்கி வைத்து இருந்துள்ளார்.

இந்நிலையில் மணிப்பூரைச் சேர்ந்த பெண்ணிற்கு மர்ம நபர் ஒருவர் instagram மூலமாக , ஜோ ரிச்சர்ட் மற்றும் மணிப்பூர் பெண்ணும் ஆபாசமாக இருக்கும்படியாக ஏ ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபாச வீடியோ ஒன்றை தயாரித்து மணிப்பூரை சேர்ந்த பெண்ணிற்கு அனுப்பி மிரட்டியுள்ளார். தொடர்ந்து டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளத்திலும் வெளியிட்டதால் அச்சமடைந்த மணிப்பூரைச் சேர்ந்த பெண் அந்த மர்ம நபர் யார் என்று தெரியாத போது ஜோ ரிச்சர்ட் உதவி கேட்டு உள்ளார்.

ஜோ ரிச்ர்சட்டும் உதவுவது போல் மிரட்டும் instagram மர்ம நபரை தொடர்பு கொண்டு குறுஞ்செய்தி வழியாக எச்சரிக்கை கொடுத்துள்ளார்.அப்போது தொடர்ந்து இந்த ஆபாச வீடியோவை வெளியில் விடாமல் இருப்பதற்கு தான் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஜோ ரிச்சர்ட் மற்றும் மணிப்பூர் பெண் உல்லாசமாக இருப்பது போல் இருக்கும் வீடியோவை, உண்மையாகவே உல்லாசமாக இருந்து வீடியோ அனுப்ப வேண்டும் அப்பொழுதுதான் இது போன்று ஏஐ தொழில்நுட்ப வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடாமல் இருப்பேன் என மணிப்பூரைச் சேர்ந்த பெண்ணை மிரட்டியுள்ளார்.

அப்போது ஜோ ரிச்சர்ட் இந்த பிரச்சனையை முடிக்க உல்லாசமாக வீடியோ எடுத்து அனுப்பி விடுவோம் என மணிப்பூரைச் சேர்ந்த பெண்ணை சம்மதிக்க வைத்துள்ளார். இந்த நிலையில் தான் அந்தப் பெண்ணின் சகோதரிக்கு தகவல் தெரிந்து இந்தத் தவறு நடக்காமல் சம்பந்தப்பட்ட மணிப்பூரைச் சேர்ந்த பெண்ணை மீட்டு உள்ளார்.

வழக்கறிஞர் உடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தைரியமாக புகார் அளித்ததன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போது தான், உடன் இருந்த ஜோ ரிச்சர்ட் தனது தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி மணிப்பூரைச் சேர்ந்த பெண்ணை ஆசைக்கு இணங்க வைக்க முயற்சித்தது தெரியவந்துள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் மிரட்டும் நபரும் ஆபாசமாக வீடியோ உருவாக்கிய நபரும் ஜோ ரிச்சர்ட் என்பது தெரிய வந்தது.

குறிப்பாக நாடகமாடும் பொழுது ஆர்வத்தில் தவறான வழிகளை காட்டி பிரச்சனையிலிருந்து தப்பிப்பதற்காக உதவுவது போல் ஓட்டல் ரூம் புக் செய்து உல்லாசமாக இருக்கலாம் என ஐடியா கொடுத்ததாக ஜோ ரிச்சர்ட் பற்றி சம்பந்தப்பட்ட மணிப்பூரை சேர்ந்த பெண்கள் போலீசாரிடம் தெரிவிக்கும்போது சந்தேகம் வலுத்தது.

இருப்பினும் டெக்னிக்கலாக தப்ப முயன்ற ஜோ ரிச்சர்ட்டை டெக்னாலஜியை வைத்து சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அதிலும் அவர் வைத்திருந்த லேப்டாப் மற்றும் செல்போனை ஆய்வு செய்த போது ஆபாசமாக ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் பயன்படுத்தி வீடியோ தயாரிக்க தேவையான செயலிகளையும் புகைப்படங்களையும் அவர் வைத்திருப்பது ஆதாரமாகக் கிடைத்தது. இதனைஅடுத்து லேப்டாப் மற்றும் அவர் பயன்படுத்திய செல்போனையும் கைது நடவடிக்கையின் போது போலீசார் பறிமுதல் செய்தனர். அதிலும் வடமாநில பெண்கள் சிலர் ஆபாசமாக வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளிவருவதாலும் ஸ்பா உள்ளிட்ட இடங்களில் பாலியல் தொழில் நடப்பதாலும், மணிப்பூரைச் சேர்ந்த இந்தப் பெண்ணை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்டால் யாரும் சந்தேகப்பட மாட்டார்கள் என்று நினைத்து ஏ ஐ பயன்படுத்தி ஆபாச வீடியோ வெளியிட்டதாக வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஏஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மார்ஃபிங் செய்து ஆபாசமாக வீடியோவை உருவாக்கி மிரட்டல் விடுத்தாலும் பயந்து புகார் அளிக்காமல் இருப்பதை தவிர்த்து, தைரியமாக மணிப்பூரைச் சேர்ந்த பெண்கள் புகார் அளித்ததால் இந்த டெக்னிக்கல் காம கொடூரன் போலீசார் வசம் சிக்கியுள்ளார். கைது செய்யப்பட்ட ஜோ ரிச்சர்ட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை மேற்கு மண்டல சைபர் க்ரைம் போலீசார் சிறையில் அடைத்தனர்.