ஈஷா கிராமோத்சவம் எவ்வாறு தன்னை போன்ற கிராமத்து விளையாட்டு வீரர்களுக்கு அடையாளமும், அங்கீகாரமும் தருகிறது என்பது குறித்து அவர் நம்மிடம் பேசினார். அவர் பேசுகையில், “நாங்கள் மீனவ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எனக்கு சிறுவயது முதல் கைப்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம். 8-ஆவது வரை மட்டுமே படித்துள்ளேன். தற்போது, மீன் வியாபாரம் செய்து வருகிறேன்.
கடந்த இரண்டு ஆண்டுகள் முன்பு, தீபாவளி அன்று பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட விபத்தில் எனது ஒரு கையை இழக்க நேரிட்டது. அப்போது, கைப்பந்து விளையாட முடியாது என்று மிகவும் வருந்தினேன். ஆனால், நம்பிக்கையை இழக்கவில்லை. ஒரு கையால் கைப்பந்தாடி பயிற்சி பெற்றேன். பிறகு, போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறேன். நண்பர்கள் மிகவும் உறுதுணையாக உள்ளனர். எங்கள் பகுதியில் கைப்பந்து வீரனான எனக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது. இது மகிழ்ச்சியைத் தருகிறது. எங்கள் சுற்றுவட்டாரத்தில் நடைபெறும் அனைத்துப் போட்டிகளில் கலந்து கொள்கிறேன்.
ஈஷா கிராமோத்சவம் போட்டிகள் எங்களைப் போன்ற மாற்றுத்திறனாளிகளை அடையாளப்படுத்துகிறது. நாங்கள் வளர உற்சாகப்படுத்துகிறது. ஈஷா கிராமோத்சவம் போட்டிகளில் பங்கேற்பதைப் பெருமையாகக் கருதுகிறோம். கடந்தாண்டு நடைபெற்ற கிராமோத்சவ கைப்பந்து லீக் போட்டியில் 3 ஆவது பரிசு பெற்றுள்ளோம். இந்தாண்டு எங்கள் ஊரில் இருந்து "ஏ", "பி" என
இரு அணிகள் கலந்து கொண்டோம். இதில் "ஏ" அணி வெற்றி பெற்று, அடுத்த கட்டத்துக்கு முன்னேறியுள்ளது.
விளையாட்டில் நாங்கள் சிறந்து விளங்க, ஈஷாவின் ஒத்துழைப்பை மனதாரப் பாராட்ட வேண்டும். நுழைவுக் கட்டணமின்றி இளைஞர்கள், மகளிரை விளையாட்டு வீரர், வீராங்கனைகளாக உருவாக்கி வருவது போற்றுதலுக்கு உரியது. மாற்றுத்திறனாளிகளுக்கான கைப்பந்து விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்பதே என் லட்சியம். ஈஷா போன்ற அமைப்புகள் எனக்கு உதவினால் நிச்சயம் நான் சாம்பியனாக சாதிப்பேன்” என்றார்.
தேவாவின் கதை, தடைகளைத் தாண்டி தன்னம்பிக்கையுடன் வெற்றி பெற நினைக்கும் ஒவ்வொரு கிராமத்து இளைஞருக்கும் உத்வேகமாகும். ஈஷா கிராமோத்சவ விளையாட்டுத் திருவிழா, வெறும் போட்டித் தொடர் அல்ல, கிராமத்து உள்ளங்களில் நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தை விதைக்கும் ஓர் உற்சவம்.