K U M U D A M   N E W S

ஈஷா கிராமோத்சவம் எங்களை அங்கீகரித்து அடையாளம் தருகிறது - ஒரு கையில் வாலிபால் ஆடி அசத்தும் கடலூர் தேவா

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் தேவா(22). வாலிபால் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். சில வருடங்களுக்கு முன்பு தீபாவளி நாளில் எதிர்பாராத விதமாக நிகழ்ந்த விபத்தில் தன்னுடைய ஒரு கரத்தினை இழந்து உள்ளார். தன் ஒரு பக்க கரத்தினை இழந்த பிறகும் கூட தொடர் முயற்சி மற்றும் பயிற்சியின் மூலம் தொடர்ந்து வாலிபால் போட்டிகளில் விளையாடி பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.