தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு சப்பரவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவருடன் இணைந்து முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி மற்றும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
அதிமுக நிர்வாகியை புகழ்ந்த திமுக நிர்வாகி
முன்னதாக மேடையில் விஸ்வ பிரம்மா மகாஜன சங்கத்தின் மாநில பொருளாளரும், திமுகவைச் சேர்ந்த நகர துணை செயலாளர் முத்துக்குமார் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா அரவணைப்போடு நடந்து கொள்வதாகவும், அதற்காகத்தான் அதிமுக ஜெயித்தது என்றும் வரக்கூடிய தேர்தலிலும் அவர் வெற்றி பெறுவார் எனவும் எதிர்க்கட்சிக்காரனாக இருந்து சொல்கிறேன் எனவும் தெரிவித்தார்.
இவர் பேசியதை தொடர்ந்து, விஸ்வ பிரம்மா மகாஜன சங்கத்தின் மாநில தலைவர் தங்கராஜ் பேசும்போது, திமுக அரசு எங்கள் சமுதாயத்தை வஞ்சித்து விட்டதாக பேசியதை தொடர்ந்து இங்கு அரசியல் பேசக்கூடாது என நிர்வாகிகளுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதைத்தொடர்ந்து மைக்கை வாங்கி சங்க பொருளாளரும் சங்கரன்கோவில் நகர திமுக துணை செயலாளருமான முத்துக்குமார் அரசியல் பேசுவதற்கு இது உகந்த மேடை அல்ல எனவும் பொதுக்கூட்டம் அமைத்து நீங்கள் எப்படி ஒன்றாக வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம் என பேச்சை நிறுத்த வேண்டுமென தெரிவித்தார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
ராஜேந்திர பாலாஜி பேச்சால் சிரிப்பலை
மீண்டும் திமுக நகர துணை செயலாளர் முத்துக்குமார், 26 வருடமாக திமுகவில் இருக்கிறேன் என கட்சி பற்றி பேசியதை தொடர்ந்து அதிகமான சலசலப்பு வாக்குவாதமாக எழவே, மேடையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து சிறிது நேரத்திற்கு பிறகு பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அடுத்த தேர்தல் முடிந்து வரும் பொழுது நிச்சயமாக நல்ல பதவியில் வந்து உங்களை சந்திப்போம் என தெரிவித்தார். மேலும், அனைவரும் அறிவாளியாக இருந்தால் இதுபோன்று வாக்குவாதம் ஏற்படும் என்று ராஜேந்திர பாலாஜி கூறியதை தொடர்ந்து அங்கு சிரிப்பலை எழுந்தது.