சென்னையில் இருந்து பெங்களூருக்கு தனியார் சொகுசு பேருந்தில் 26 பயணிகளை ஏற்றி வந்தபோது வேலூர்மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த அகரம்சேரி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்தில் இருந்து புகை வந்துள்ளது.
சொகுசு பேருந்து எரிந்து சேதம்
அதனை ஓட்டுனர் மற்றும் சில பயணிகள் இறங்கி பார்த்தபோது திடீரென பேருந்து முழுவதும் தீ பற்றி எரிய தொடங்கியது. தீ மள மளவென பேருந்து முழுவதும் எரியத்தொடங்கியதால் சில பயணிகள் பேருந்தின் அவசர கால வழியில் சுங்கச்சாவடி நெடுஞ்சாலைப் ரோந்து பணியாளர்கள் உதவியுடன் கீழே இறங்கினர்.
இதனால் பேருந்தில் பயணம் செய்த 26 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக எந்த ஒரு காயும் இன்றி உயிர்தப்பினர். இது குறித்து தகவல் அறிந்து வந்த குடியாத்தம் தீயணைப்புத்துறையினர் இரண்டு முறை தண்ணீரை நிரப்பி வந்து பேருந்தை அனைத்தனர். இருப்பினும் பேருந்து முழுமையாக எரிந்து சேதம் அடைந்தது.
போலீசார் விசாரணை
பள்ளிகொண்டா போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பேருந்தில் பயணம் செய்த பயணிகளை மாற்றுப்பேருந்து மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சொகுசு பேருந்து தீப்பற்றி எரிந்தது வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.