தமிழ்நாடு

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்: ஒரு சவரன் ரூ.84,000-ஐ தொட்டது!

தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்: ஒரு சவரன் ரூ.84,000-ஐ தொட்டது!
Gold Price Increase
உலகளாவிய பொருளாதார மந்தநிலை மற்றும் போர் பதற்றங்கள் காரணமாக, தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.84,000-க்கு விற்பனையாகி, புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

நேற்றைய அதிரடி விலை ஏற்றம்

கடந்த செப்.16-ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.82,000-ஐ கடந்து புதிய உச்சத்தை அடைந்த நிலையில், அதைத் தொடர்ந்து விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டது. ஆனால், நேற்று (செப்.22) ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து அதிர்ச்சி அளித்தது.

காலை நிலவரப்படி, ஒரு சவரன் தங்கம் ரூ.560 உயர்ந்து ரூ.82,880-க்கு விற்பனையானது.மாலையில் மீண்டும் ஒரு சவரன் தங்கம் ரூ.560 அதிகரித்து ரூ.83,440-க்கு விற்பனையானது.

இன்றைய விலை நிலவரம்

நேற்றைய தொடர் உயர்வுக்குப் பிறகு, இன்று காலை நிலவரப்படி மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

* ஒரு கிராம் தங்கம் ரூ.70 உயர்ந்து ரூ.10,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

* ஒரு சவரன் தங்கம் ரூ.560 உயர்ந்து ரூ.84,000-க்கு விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலையும் உயர்வு

தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.149-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,000 உயர்ந்து ரூ.1,49,000-க்கு விற்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் ஏற்பட்ட சில பொருளாதார மாற்றங்கள், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் உலகளாவிய சந்தை போக்குகள் ஆகியவை இந்த தொடர் விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணங்களாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.