தமிழ்நாடு

தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்.. சவரனுக்கு ரூ.400 அதிகரிப்பு!

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்.. சவரனுக்கு ரூ.400 அதிகரிப்பு!
Gold Rate
இம்மாதத் தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, இன்று (அக். 4) மீண்டும் அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.87,600 என்ற புதிய விலையில் விற்பனையாகிறது.

நேற்றைய விலை நிலவரம்

தங்கம் விலை கடந்த இரண்டு தினங்களாக ஒரே நாளில் இரு முறை மாறி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, நேற்றும் (அக். 3) காலையில் கிராமுக்கு ரூ.110-ம், சவரனுக்கு ரூ.880-ம் குறைந்திருந்தது. பின்னர் மாலையில் கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம் அதிகரித்து இருந்தது.

மொத்தத்தில், நேற்று முன்தினம் விலையுடன் ஒப்பிடுகையில், நேற்று ஒரு கிராம் ரூ.50 குறைந்து ரூ.10,900-க்கும், ஒரு சவரன் ரூ.400 குறைந்து ரூ.87,200-க்கும் விற்பனையானது.

இன்றைய விலை உயர்வு

இந்த நிலையில், இன்று ஆபரணத் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.87,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.50 உயர்ந்து ரூ.10,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

தங்கம் விலையைப் போலவே வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3,000-ம் உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு கிராம் வெள்ளி ரூ.165-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச சந்தையில் ஏற்படும் பொருளாதார மாற்றங்கள், டாலரின் மதிப்பு மற்றும் உலகளாவிய சந்தை நிலவரங்களே இந்தத் தொடர்ச்சியான விலை உயர்வுக்குக் காரணம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.