தங்கம் விலை கடந்த சில நாட்களாகக் கட்டுக்கடங்காமல் உயர்ந்து வரும் நிலையில், இன்று மீண்டும் ஒரு புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது. சவரனுக்கு ஒரே நாளில் ரூ. 1,280 உயர்ந்துள்ளதால், நகை வாங்கக் காத்திருந்த பொதுமக்கள் கடும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
சவரன் ரூ. 1.08 லட்சத்தைக் கடந்தது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரு சவரன் ரூ. 1,07,600-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதிரடியாக ரூ. 1,280 உயர்ந்து ரூ. 1,08,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ. 13,450-ஆக இருந்த நிலையில், இன்று ரூ. 160 உயர்ந்து ரூ. 13,610-க்கு விற்பனையாகிறது.
அசுர வேகத்தில் உயரும் வெள்ளி விலை
தங்கத்திற்குப் போட்டியாக வெள்ளி விலையும் இன்று விண்ணைத் தொட்டுள்ளது. நேற்று ஒரு கிலோ வெள்ளி ரூ. 3,18,000-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் ரூ. 12,000 உயர்ந்து ரூ. 3,30,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 330-க்கு விற்பனையாகிறது.
திணறும் பொதுமக்கள்
திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்காக நகை வாங்கத் திட்டமிட்டிருந்த நடுத்தரக் குடும்பத்தினர், இந்தத் தொடர் விலை உயர்வால் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். நகை முதலீட்டாளர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், சாமானியர்களுக்குத் தங்கம் என்பது எட்டாக்கனியாகி வருகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

LIVE 24 X 7