தமிழ்நாடு

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் எதிரொலி மதுரை மீனாட்சியம்மன் கோவில் உள்ளிட்ட மக்கள் கூடும் பகுதகளில் துப்பாக்கி ஏந்திய பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் போலீஸ் தீவிர சோதனை
பெஹல்காமில் தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நேற்று தீவிரவாத கும்பல் நடத்திய தாக்குதலில் சுற்றுலா ப்பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த தீவிரவாத தாக்குதல் சம்பவம் எதிரொலியாக மதுரை மாவட்டம் முழுவதிலும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுவருகின்றன. மதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட வழிபாட்டுதலங்கள் மற்றும் விமான நிலையம், ரயில்வே நிலையம், பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் பகுதிகள் என பல்வேறு பகுதிகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் கூடுதல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீனாட்சி அம்மன் கோவிலில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் நிலையில் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் பலத்த சோதனைக்கு பின்பாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த நாட்களில் கோவில்களில் நடைபெறும் சோதனையை விட தீவிர சோதனை நடத்தப்பட்ட பின்பாக பக்தர்கள் பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு

இதேபோன்று ரயில்வே நிலையத்தில் பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்ட பின்பாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் ரயில்களில் மோப்பநாய் உதவியுடன் ரயில்வே காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாவட்டம் முழுவதிலும் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டம் குறித்து சந்தேகத்துக்குரிய பொருட்கள் கீழே கிடந்தால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்குமாறு மாநகர காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.