மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பியாக பணியாற்றும் சுந்தரேசன், தனக்கு வழங்கப்பட்ட வாகனம் பறிக்கப்பட்டதாக, காவல்துறை உயர் அதிகாரிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், டிஎஸ்பி சுந்தரேசனின் வாகனம் திரும்ப பெறப்படவில்லை, அலுவல் பணி காரணமாக அவரிடம் இருந்து வாங்கிய வாகனத்தை மீண்டும் திரும்ப வழங்கி விட்டதாக தெரிவித்திருந்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பியாக சுந்தரரேசன் நியமிக்கப்பட்டார். இவர் டிஎஸ்பி சுந்தரேசன் 2025 ஜூலை 17ஆம் தேதியான நேற்று தனது வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு கால்நடையாக நடந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தனது வாகனத்தை பறித்துக் கொண்டதாகவும், இதனால் ஒரு வாரமாக நடந்து சென்றதாக டிஎஸ்பி சந்தரேசன் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மேலும், தனக்கு பழுதடைந்த வாகனத்தை மாற்று ஏற்பாடாக வழங்கியதாகவும் அவர் குற்றச்சாட்டினார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “நேர்மையான காவல் அதிகாரியான எனக்கு நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. நான் இப்போது தன்னிச்சையாகப் பேட்டி அளித்தால், ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் சஸ்பெண்ட் செய்யப்படுவேன் என்பதை தெரிந்து தான் பேட்டி அளிக்கிறேன் என்று கூறினார்.
இங்கு போலீசாருக்கும் பாதுகாப்பில்லை. என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும என்பதை அறிந்தே இவ்வாறு பேட்டி அளிக்கிறேன்” என கூறினார். இந்த குற்றச்சாட்டுக்கு மாவட்ட எஸ்பி ஸ்டாலின் மறுப்பு தெரிவித்து இருக்கிறார். பின்னர், டிஎஸ்பி சுந்தரேசன், கடந்த காலங்களில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு, அதற்கு துறை ரீதியான நடவடிக்கைகளுக்கு உள்ளானதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், தஞ்சை மண்டல டிஐஜி ஜியாவுல் ஹக், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். பின்னர், டிஎஸ்பி சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்ய அவர் திருச்சி சரக ஐஜிக்கு பரிந்துரை செய்திருப்பதாக முதலில் தகவல் வெளியான நிலையில், கார் மறுக்கப்பட்டதாக புகார் அளித்த மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். இதற்கு கருத்து தெரிவித்துள்ள டிஎஸ்பி சுந்தரேசன் நேர்மைக்கு கிடைத்த பரிசு என்று தெரிவித்துள்ளார்.