தமிழ்நாடு

வாகன ஓட்டிகள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. ஏஎன்பிஆர் கேமரா பொருத்தும் பணி தீவிரம்!

சென்னையில் விதிமீறும் வாகன ஓட்டிகள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது முக்கிய சாலைகளில் ஏஎன்பிஆர் கேமரா பொருத்தும் பணி தீவிரமடைந்துள்ளது. இரண்டு மாத காலத்தில் செயல்பாட்டுக்கு கொண்டு வர சென்னை போக்குவரத்து காவல்துறை திட்டமிட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. ஏஎன்பிஆர் கேமரா பொருத்தும் பணி தீவிரம்!
வாகன ஓட்டிகள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. ஏஎன்பிஆர் கேமரா பொருத்தும் பணி தீவிரம்!
சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து அபராதம் விதிக்கும் பணியை ஆங்காங்கே போக்குவரத்து போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் விதிமீறலில் தொடர்ந்து வாகன ஓட்டிகள் ஈடுபட்டு வருகின்றனர். சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் போக்குவரத்து போலீசார் அபராதங்களை விதித்து வந்தனர்.

இந்நிலையில் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப ஏஎன்பிஆர் எனப்படும் தானாக நம்பர் பிளேட்டை கண்டுபிடித்து, அபராதம் விதிக்கும் கேமராக்களை பயன்படுத்தினர். இதில், விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு தானாக அபராதம் விதிக்கும் தொழில்நுட்பத்தை போக்குவரத்து போலீசார் கொண்டு வந்தனர். முதற்கட்டமாக போக்குவரத்தில் இது போன்ற நவீன திட்டங்களை TROZ எனப்படும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் கண்காணிப்பு மண்டலம் உருவாக்கி போக்குவரத்து சீர் செய்வது மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை கண்காணித்து வந்தனர்.

இந்த திட்டத்தின் கீழ் ஏற்கனவே அண்ணா சாலை, அண்ணா நகர் ஸ்டான்லி மருத்துவமனை, ஈவேரா சாலை ஆகிய பகுதிகளில் ஏ என்பிஆர் கேமராக்கள் போடப்பட்டு தானாக விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த கேமரா விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளின் நம்பர் ப்ளேட் உடன் புகைப்படம் எடுத்து ஆர்டிஓ அலுவலகங்கள் வழியாக தொடர்புடைய வாகன ஓட்டிகளுக்கு இ- சலான்களை அனுப்புகிறது.அதற்கேற்றார் போல் விதிமீறல்களை கண்டுபிடிக்கும் வகையில் சாப்ட்வேர்களை தயார் செய்து கேமராக்களில் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த ஏஎன்பிஆர் கேமரா மூலமாக போக்குவரத்து விதிமீறல்களை காவலர்கள் இன்றி குறைக்க உதவியதால், சென்னையின் மற்ற இடங்கள் அனைத்திலும் பொருத்துவதற்கு திட்டமிட்டனர். அந்த அடிப்படையில் சென்னையில் அதிகம் போக்குவரத்து இருக்கும் பகுதிகளான அசோக் பில்லர், பாரிமுனை, ராயப்பேட்டை பகுதிகளில் ஒன்பது முக்கிய சாலைகளில் 205 ஏஎன்பிஆர் கேமராக்களை பொருத்தும் பணியை போக்குவரத்து போலீசார் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக 9 முக்கிய சாலைகளில் இதற்கென்று தனியாக பில்லர்கள் கட்டப்பட்டு அதில் ஏன்பிஆர் கேமராக்களை பொருத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில் சாப்ட்வேர் கேமராக்களில் பொருத்தி செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை போக்குவரத்து போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இன்னும் இரண்டு மாதத்தில் சென்னையின் முக்கிய சாலைகளில் இந்த ஏன்பிஆர் கேமராக்கள் செயல்பட உள்ளதாக போக்குவரத்து போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே நான்கு இடங்களில் மட்டும் ஏ என்பிஆர் கேமராக்கள் இருப்பதாக வாகன ஓட்டிகள் நினைத்து, மற்ற இடங்களில் விதிமீறலுடன் வாகனங்களை ஓட்டுவதாக கூறப்படும் நிலையில், தற்போது சென்னையின் பெரும்பாலான இடங்களை கண்காணிக்கும் வகையில் முக்கிய சாலைகளில் இந்த ஏன்பிஆர் கேமராக்கள் போடப்படுவதால் ஹெல்மெட் அணியாதவர்கள், சீட் பெல்ட் அணியாதவர்கள், சிக்னல் தாண்டுபவர்கள், அதிவேகமாக செல்பவர்கள், நிறுத்த கோட்டை தாண்டி நிற்பவர்கள், போன்ற விதிகளை மீறுபவர்கள் சென்னையில் தப்ப முடியாத அளவிற்கு கேமராக்கள் பொருத்தப்படும் பணி நடைபெறுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.