போதை பொருள் விற்பனை அதிகரிப்பு
கச்சத்தீவு நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது.இதனை மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தப்பட வேண்டும் நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லை சந்திப்பு உடையார்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறும்போது, “தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. பெரும்பாலான இளைஞர்கள் தற்போது கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தி வருகிறார்கள். ஜெயலலிதா தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தபோது, இதுபோன்று கஞ்சா உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்ய முடியுமா? காவல்துறையை தனது கட்டுப்பாட்டுக்குள் ஜெயலலிதா வைத்திருந்தார்கள். ஆனால் தமிழகத்தில் தற்போது கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருவதால் இளைஞர்கள் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
திமுக தலைமை பயந்து வருகிறது
அமைச்சர் பொன்முடி பெண்களைப் பற்றி மிகத் தரக்குறைவாக பேசி உள்ளார். அவர் மீது திமுக தலைமை நடவடிக்கை எடுப்பதற்கு பயந்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக நாங்கள் ஒவ்வொரு வீடு, வீடாக சென்று பெண்களிடம் எடுத்துக் கூற உள்ளோம். போராட்டம் நடத்தினால் அன்றோடு இந்த பிரச்சனை முடிந்து விடும்.மற்ற மாநிலங்களை விட தமிழகத்திற்கு மத்திய அரசு கூடுதலாக மூன்று மடங்கு நிதிகளை வழங்கி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில் வழங்கிய நிதியை விட தற்போது, அதிகமாக நிதி வழங்கப்பட்டு உள்ளது.
தற்போது கச்சத்தீவை மீட்க வேண்டும் என சட்டசபையில் தீர்மானத்தை திமுக அரசு நிறைவேற்றி உள்ளது. அதேபோல நீட்டை ரத்து செய்ய வேண்டும் என சட்ட மன்றத்தில் திமுக அரசு தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளது. திமுக அரசு ரெட்டை வேடம் போடுகிறது திமுக. இதனை மக்கள் மத்தியில் ஊடகங்களும் செய்தியாளர்களும் கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உற்சாக வரவேற்பு
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக இருந்த அண்ணாமலையின் பதவி காலம் முடிவடைந்து நிலையில் புதிய தலைவருக்கான தேர்தல் நடைபெறும் என கட்சி அறிவித்திருந்தது. இந்நிலையில் போட்டி வேட்பாளர்கள் யாரும் இன்றி விருப்ப மனு அளித்த நயினார் நாகேந்திரன் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக பாஜகவும் அதிமுகவும் கூட்டணி உறுதியானது.
இதனைத் தொடர்ந்து சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையம் வழியாக நெல்லை மாநகருக்கு மாலை வந்தடைந்தார் நயினார் நாகேந்திரன். மாநகர எல்லையான கேடிசி நகர் பகுதியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அவரை வரவேற்கும் விதமாக காத்திருந்தனர். கரகாட்ட கலைஞர்கள் ஆட்டம் ஒருபுறம், சிலம்பாட்ட கலைஞர்கள் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களின் கொண்டாட்டங்களுடன் காத்திருந்த தொண்டர்கள் நயினார் நாகேந்திரன், மாநகர பகுதிக்குள் வந்ததும், பட்டாசுகளை தொடர்ந்து வெடிக்க செய்தனர். ஆளுயுர ரோஜா மாலையை நயினார் நாகேந்திரனுக்கு அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.