சென்னை கூடுவாஞ்சேரியை சேர்ந்தவர் ஐஸ்வர்யா. இவர் இன்ஸ்டாகிராம் மூலமாக ஆழ்வார் திருநகர் பகுதியில் செயல்பட்டு வரும் ”pearl 32 டென்டல் ஸ்பா” என்ற கிளினிக் ஒன்றின் விளம்பரத்தை பார்த்து சிகிச்சைக்காக சென்றுள்ளார். பல நடிகைகளுக்கும், சின்னத்திரை நடிகைகளுக்கும் இந்த டென்டல் ஸ்பா கிளினிக் மூலமாக சிகிச்சை பெற்றுள்ளதாக பதிவிடப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பார்த்ததை நம்பி ஐஸ்வர்யா அந்த கிளினிக்கிற்கு சென்றுள்ளார்.
சிகிச்சைக்காக வந்த ஐஸ்வர்யாவிடம் பல் மருத்துவர் என சிகிச்சை அளித்த ஹரிஷ் வெங்கடேஸ்வரன் மற்றும் அந்த கிளினிக்கை நடத்தி வரும் வீணா என்பவர் மிகவும் நட்பாக பழகியதாக கூறப்படுகிறது. அப்போது தனது மருத்துவமனையை விரிவுபடுத்த பணம் தேவைப்படுவதாக ஹரிஷ் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார். குறிப்பாக வெளிநாட்டில் இருந்து நவீன இயந்திரங்கள் பெண்களின் அழகு சிகிச்சைக்காக வாங்க வேண்டும் எனக் கூறி ஆசை வார்த்தை காட்டியுள்ளார்.
இவர் பல நடிகைகளுக்கு சிகிச்சை அளித்த வருவதால், இவரை நம்பி டென்டல் கிளினிக் விரிவு செய்ய பணம் கொடுத்தால் லாபம் சம்பாதிக்கலாம் என்று ஐஸ்வர்யா முடிவெடுத்துள்ளார்.
மாதம் ஒரு லட்சம்:
அத்துடன் 40 லட்ச ரூபாய் கடன் கொடுத்தால் மாதம் ஒரு லட்சம் ரூபாய் வீதம் 60 மாதங்கள் கொடுப்பதாக தன்னிடம் ஹரிஷ் வெங்கடேஸ்வரன் கூறியதை ஐஸ்வர்யா நம்பியதாக தெரிகிறது. அவரது வார்த்தையை நம்பி ஐஸ்வர்யாவும் அவரது கணவர் சதீஷ் குமாரும் பல வங்கிகளில் கடன் பெற்று 40 லட்சம் ரூபாயை பல் மருத்துவர் ஹரிஷ் வெங்கடேஸ்வரனிடம் கொடுத்துள்ளனர்.
முதல் 13 மாதங்கள் மாதம் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்த ஹரிஷ் வெங்கடேஸ்வரன் அதன் பின்னர் பணம் எதுவும் கொடுக்கவில்லை. இது தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஐஸ்வர்யா புகார் அளித்தார். புகாரை விசாரித்த போலீசார், ஹரிஷ் வெங்கடேஸ்வரன் வசூல் செய்த பணத்தை ஆன்லைனில் முதலீடு செய்து ஏமாந்தது தெரியவந்துள்ளது. மேலும், பணம் மோசடி செய்தது உண்மை என்பதை கண்டறிந்தனர். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் ஒரு பண மோசடி வழக்கு:
ஏற்கனவே ஹரிஷ் வெங்கடேஸ்வரன் கடந்த 2023 ஆம் ஆண்டு திவ்யா என்ற பெண்ணிடம் மின்ட் வெஸ்ட் என்ற நிறுவனத்தை நடத்தி வருவதாகவும் அதில் 30 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறி பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றிய வழக்கில் திருமங்கலம் போலீசார் கைது செய்துள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் ஹரிஷ் வெங்கடேஸ்வரன் உண்மையாக பல் மருத்துவரா என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்த நிலையில் அது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் நடிகைகள் மற்றும் சின்னத்திரை நடிகைகள் உள்ளிட்ட எத்தனை நபர்களிடம் நட்பாக பேசி முதலீடு பெற்று மோசடி செய்துள்ளாரா? என்பது குறித்து போலீசார் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.