தமிழ்நாடு

கோவையில் 7,000 சந்தேக நபர்களின் கைவிரல் ரேகை சேகரிப்பு..குற்றங்களைக் கட்டுப்படுத்தப் புதிய யுக்தி!

கோவை, மாநகர பகுதியில் சந்தேக நபர்கள் 7,000 பேரிடம் கையே விரல் ரேகை சேகரிக்கப்பட்டு உள்ளதாகக் காவல்துறை ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.

கோவையில் 7,000 சந்தேக நபர்களின் கைவிரல் ரேகை சேகரிப்பு..குற்றங்களைக் கட்டுப்படுத்தப் புதிய யுக்தி!
கோவையில் 7,000 சந்தேக நபர்களின் கைவிரல் ரேகை சேகரிப்பு..குற்றங்களைக் கட்டுப்படுத்தப் புதிய யுக்தி!
கோவையில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு, சந்தேகத்தின் அடிப்படையில் பிடிபடும் நபர்களிடமிருந்து இதுவரை 7,000 பேரின் கைவிரல் ரேகை உட்படத் தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக, கோவை மாநகரக் காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார். இந்தத் தரவுகள், குற்றவாளிகளை உடனடியாகக் கண்டறியப் பெரிதும் உதவியாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

கோவை மாநகரத்தில் குற்றச் செயல்களைத் தடுக்க, காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 24 மணி நேர ரோந்துப் பணி, தீவிர வாகனச் சோதனை போன்ற திட்டங்களால் குற்றச் சம்பவங்கள் வெகுவாகக் குறைந்துள்ளதாகக் காவல்துறை ஆணையர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கடந்த ஆறு மாதங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 158 ரவுடிகள் கோவை மாநகருக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கைவிரல் ரேகையின் முக்கியத்துவம்:

காவல்துறை ஆணையர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாநகரில் ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீசார், சந்தேகத்திற்கு இடமான நபர்களைப் பிடித்து விசாரணை செய்கின்றனர். அப்போது, அவர்களின் கைவிரல் ரேகை, கண் கருவிழிப் புகைப்படம் மற்றும் முகவரி ஆகியவை சேகரிக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 7,000 நபர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.

சமீபத்தில் செல்வபுரத்தில் நடந்த ஒரு கொலை வழக்கில், பழைய குற்றவாளிகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களைச் சரி பார்த்தபோது, ஏற்கனவே சேகரிக்கப்பட்ட விவரங்கள்மூலம் குற்றவாளிகளை உடனடியாக அடையாளம் காண முடிந்தது. இதன் காரணமாக அவர்கள் உடனே கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடமிருந்து பெறப்படும் இந்த விவரங்கள், குற்றவாளிகளைக் கண்டறிய மிகவும் பயனுள்ளதாக உள்ளன. அவர்கள் தற்போது எங்கு உள்ளனர், எந்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறித்துத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம், என்று சரவண சுந்தர் மேலும் தெரிவித்தார். இந்தத் தொடர் கண்காணிப்பு மூலம் குற்றச் சம்பவங்கள் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.