சென்னை, திருவேற்காடு பகுதியில் அதிவேகமாக வந்த ஒரு சொகுசு கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய டிரைவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவேற்காடு விஜிஎன் குடியிருப்பைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர், தனது காரில் மதுரவாயலில் இருந்து பூந்தமல்லி நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது, வானகரம் சிக்னல் அருகே ஒரு இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு, நிற்காமல் அதிவேகத்தில் தப்பிச் சென்றார். அவரைப் பின்தொடர்ந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், மீண்டும் வானகரம் மீன் மார்க்கெட் அருகே மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு சீனிவாசன் நிற்காமல் சென்றதைக் கண்டு மேலும் ஆத்திரமடைந்தனர்.
விபத்துக்களை ஏற்படுத்திவிட்டு அதிவேகத்தில் தப்பிச் சென்ற சீனிவாசனை, பொதுமக்கள் மற்றும் போலீசார் இணைந்து வேலப்பன்சாவடி சிக்னல் அருகே பேரிகேட் வைத்து மடக்கிப் பிடித்தனர். இந்த விபத்துக்களில் ஒரு நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மற்றொருவர் கால்கள் முற்றிலும் முறிந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆத்திரமடைந்த பொதுமக்கள், விபத்தை ஏற்படுத்திய சீனிவாசனின் கார் கண்ணாடியை அடித்து நொறுக்கியதுடன், அவருக்கும் தர்ம அடி கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவேற்காடு போலீசார், சீனிவாசனை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.