சென்னை மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, திருத்தங்கள் மேற்கொள்வது போன்ற பணிகளுக்காகச் சிறப்பு முகாம் இன்று மற்றும் நாளை (ஜனவரி 11) அந்தந்த வாக்குச் சாவடிகளில் நடைபெறும் என்று சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முகாம் நடைபெறும் நோக்கம்
கடந்த மாதம் 19 ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத தகுதியான நபர்களைச் சேர்ப்பது, புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது மற்றும் பதிவுகளில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வது ஆகியவற்றுக்காக இந்தச் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இன்று மற்றும் நாளை இந்தச் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
யார் விண்ணப்பிக்கலாம்? எப்படி விண்ணப்பிக்கலாம்?
புதிய வாக்காளர்கள்: 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியன்று 18 வயது பூர்த்தியடைந்த தகுதியான நபர்கள், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள், படிவம் 6 மற்றும் உறுதிமொழிப் படிவத்துடன், தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட 13 ஆதார ஆவணங்களில் ஏதேனும் ஒன்றினை இணைத்து, பெயரைச் சேர்த்துக் கொள்ளலாம்.
பெயர் நீக்கம்: வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்ய விரும்புவோர் படிவம் 7-இல் விண்ணப்பிக்கலாம்.
திருத்தங்கள்: பெயர் திருத்தம், வாக்காளர் பட்டியலில் முகவரி மாற்றம், கைபேசி எண் இணைப்பு, ஆதார் எண் இணைப்பு, புகைப்பட மாற்றம், பாக மாற்றம் போன்ற திருத்தங்களை மேற்கொள்ள விரும்புவோர் படிவம் 8-இல் விண்ணப்பிக்கலாம்.
சென்னை மாவட்ட மக்கள் இந்த இரண்டு நாட்கள் நடைபெறும் சிறப்பு முகாமைத் தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

LIVE 24 X 7