தமிழ்நாடு

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில்: இனி 20 பெட்டிகளுடன் பயணம்!

சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயிலில் பயணிகள் நலன் கருதி கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் இயக்கப்பட்டுள்ளது.

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில்: இனி 20 பெட்டிகளுடன் பயணம்!
சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில்: இனி 20 பெட்டிகளுடன் பயணம்!
சென்னைக்கும் திருநெல்வேலிக்கும் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் அதிவேக ரயிலில், பயணிகளின் வசதி கருதி கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால், வருகிற செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் இந்த ரயில் மொத்தம் 20 பெட்டிகளுடன் இயக்கப்படும்.

சென்னை மற்றும் நெல்லைக்கு இடையே பயணம் செய்யும் பயணிகளிடம் வந்தே பாரத் ரயிலுக்கு அதிக வரவேற்பு கிடைத்ததையடுத்து, ரயில்வே நிர்வாகம் இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது. பயணிகளின் வசதி மற்றும் போக்குவரத்துத் தேவைகளைக் கருத்தில்கொண்டு, தற்போது உள்ள பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் எனப் பயணிகள் தரப்பிலிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன. இந்தக் கோரிக்கைகளைப் பரிசீலித்த தெற்கு ரயில்வே, வந்தே பாரத் ரயிலின் சேவைத் திறனை மேம்படுத்த, 4 புதிய பெட்டிகளை இணைக்கத் திட்டமிட்டுள்ளது.

இந்தக் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதால், பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், பொதுமக்களுக்குக் காத்திருப்புப் பட்டியல் குறைந்து, எளிதாகப் பயணச்சீட்டு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது, சென்னை - நெல்லை வழித்தடத்தில் பயணிகளின் போக்குவரத்துச் சிரமங்களைக் குறைக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.