தேனி மாவட்டம், கம்பம் அருகே உத்தமபுரம் பகுதியை சேர்ந்தவர் அம்பிகா. இவருடைய மகன் பி.இ. படித்துள்ளார்.கடந்த 2023ம் ஆண்டு அம்பிகா ஒரு தனியார் கூட்டத்தில் கலந்து கொண்டபோது, ஆண்டிப்பட்டி அருகே டி.பொம்மிநாயக்கன்பட்டி பகுதியை சின்னதாய் என்பவர் பழக்கமாகி உள்ளார்.
ரூ.1 லட்சம் மோசடி
சின்னத்தாய் பாரதிய ஜனதா கட்சியில் மகளிர் அணி மாவட்ட செயலாளராக இருந்து வருவதாகவும், அம்பிகாவின் மகனுக்கு மதுரை விமான நிலையத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகவும், அதற்கு ரூ.1.50 லட்சம் வரை செலவாகும் என்று, ஆசை வார்த்தைகள் கூறி வந்துள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் அம்பிகாவிடம் சின்னதாய் மற்றும் அவரது உறவினர் பட்டை நாகராஜ் என்பவரும் முதற்கட்டமாக ரூ.50 ஆயிரமும், அதன் பிறகு ரூ.23 ஆயிரம் மற்றும் டிசம்பர் மாதம் ரூ.27 ஆயிரம் வாங்கியதாக தெரிகிறது.
பாஜக பெண் நிர்வாகி மீது வழக்கு
மொத்தமாக ரூ.1 லட்சத்தை வாங்கி கொண்டு வேலை வாங்கி தராமல் சின்னத்தாய் மற்றும் பட்டை நாகராஜ் ஆகிய இருவரும் ஏமாற்றி வந்துள்ளனர். இதனால் கடந்த மாதம் 14ம் தேதி அம்பிகா டி.பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள சின்னதாய் வீட்டிற்கு சென்று பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.அப்போது சின்னதாய் தகாத வார்த்தையில் பேசி, சின்னதாயின் மகன் கம்பி மற்றும் அருவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அம்பிகா நேற்று ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் ஆண்டிப்பட்டி போலீசார் சின்னதாய், பட்டை நாகராஜ் மற்றும் சின்னதாயின் மகன் ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.