+ 2 பொதுத்தேர்வில் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 7,92,494 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 4,19,316 மாணவிகள் (96.70 %), மாணவர்கள் 3,73,178 ( 93.16%) தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 3.54% தேர்ச்சி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
100-க்கு 100 மதிப்பெண்:
+2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், தமிழில் 135 பேர், இயற்பியலில் 1,125 பேர், வேதியியலில் 3,181 பேர், உயிரியலில் 827 பேர், கணிதத்தில் 3,022 பேர் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளனர். அதிகபட்சமாக கணினி அறிவியல் பாடப்பிரிவில் மட்டும் 99.73% பேர் தேர்ச்சி பெற்றதோடு 9,536 பேர் 100/100 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.
+2 தேர்வு முடிவுகள்: முதலிடம் பிடித்த அரியலூர்
அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்ற மாவட்டங்களில் அரியலூர் மாவட்டம் 98.82% தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்துள்ளது. அதற்கு அடுத்ததாக ஈரோடு மாவட்டம் 97.98% தேர்ச்சியுடன் 2-வது இடத்தையும், திருப்பூர் மாவட்டம் 97.53% தேர்ச்சியுடன் 3-வது இடத்தையும், கோவை மாவட்டம் 97.48% தேர்ச்சியுடன் 4-வது இடத்தையும், கன்னியாக்குமரி மாவட்டம் 97.1% தேர்ச்சியுடன் 5-வது இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளன.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் ஒரு சதவீதம் உயர்ந்துள்ளது. தேர்வை எதிர்கொண்ட 5387 பேரில் 4747 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.