தமிழ்நாடு

தனியார் வணிக வளாகத்தில் தீ விபத்து.. பெயிண்ட் சேமிப்பு கிடங்கு எரிந்து நாசம்..!

சென்னை கோடம்பாக்கம் பகுதியில் தனியார் வணிக வளாகத்தில் தீ விபத்து. பெயிண்ட் சேமிப்பு கிடங்கு எரிந்த நிலையில், போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது.

தனியார் வணிக வளாகத்தில் தீ விபத்து.. பெயிண்ட் சேமிப்பு கிடங்கு எரிந்து நாசம்..!
தனியார் வணிக வளாகத்தில் தீ விபத்து.. பெயிண்ட் சேமிப்பு கிடங்கு எரிந்து நாசம்..!

சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட் புரம் மூன்றாவது குறுக்கு தெருவில் தனியாருக்கு சொந்தமான வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. 

இந்த வளாகத்தின் மூன்றாவது தளத்தில் பெயிண்ட் கம்பெனிக்கு சொந்தமான சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் செயல்பட்ட சேமிப்புக் கிடங்கு இரவு பூட்டப்பட்டு ஊழியர்கள் யாரும் இல்லாத நிலையில் திடீரென நள்ளிரவில் பூட்டப்பட்ட கிடங்கில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. பின்னர் சிறிது நேரத்தில் சேமிப்புக் கிடங்கு அமைந்துள்ள மூன்றாவது தளம் முற்றிலுமாக மளமளவென தீ பற்றி எரிந்துள்ளது. 

இதனை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் இரண்டு தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் நீண்ட போராட்டத்திற்கு பின்பு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இந்த தீ விபத்து தொடர்பாக வழக்கு பதிந்துள்ள தீயணைப்புத் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு  காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். 


மேலும் இந்த தீ விபத்தில் சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி நாசமாகியது. ஊழியர்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதமும் தவிர்க்கப்பட்டுள்ளது.