மதுரை ஆதீனம் மீது புகார்
Madurai Adheenam Car Accident Case : தேசிய முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜிஜி சிவா என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் ஒன்றை கொடுத்துள்ளார். இதையடுத்து சிவா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மதுரை ஆதீனமும், அவரின் உதவியாளர், கார் ஓட்டுநர் ஆகியோர் மதுரையிலிருந்து நிகழ்விற்காக சென்னைக்கு வரும் வழியில் உளுந்தூர்பேட்டை சுங்குச்சாவடி அடுத்து ஒரு சிக்னலில் கார் வந்ததாகவும், அப்போது திட்டமிட்டு தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக ஒரு கார் மோதியதாகவும் மதுரை ஆதீனம் தெரிவித்து இருந்தார்.
தன்னை திட்டமிட்டு கொலை செய்ய சதி நடந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை அவர் தெரிவித்தது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் உளுந்தூர்பேட்டை காவல் துறையினர் சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு செய்து சிசிடிவி வெளியிட்டனர். அதில் எதுவும் இல்லை என்பது தெரிந்தது. தமிழகத்தில் திட்டமிட்டு கலவரம் ஏற்படுத்தக்கூடிய வகையில் இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் பெரும் மோதல் உண்டு பண்ணும் வகையில் அவர் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாகவே அவர் கொடுத்த பேட்டி என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. தமிழ்நாட்டில் மதக்கலவரமும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க கூடியதுபோல் இருப்பதினால் மதுரை ஆதீனம் மற்றும் அவரின் ஓட்டுநர் மேலும் அவரின் உதவியாளர் என காரில் பயணம் செய்த அனைவரும் மீதும் வழக்குப்பதிவு செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.