கோவை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட சிகரெட்டுகள், லேப்டாப்புகள் மற்றும் ட்ரோன்கள் என ₹45 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
விமான நிலையத்தில் சுங்கத்துறை சோதனை
கோவை விமான நிலையத்துக்குச் சிங்கப்பூரிலிருந்து வந்த இண்டிகோ விமானம் மற்றும் சார்ஜாவிலிருந்து வந்த ஏர் அரேபியா விமானங்களிலிருந்து வந்த பயணிகளின் உடமைகளைச் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாகச் சோதனை செய்தனர்.
அப்போது, அந்தப் பயணிகளிடமிருந்து 1,256 லைட் சிகரெட்டுகள், 115 புனி சிகரெட்டுகள், 280 இ-சிகரெட்டுகள் ஆகியவையும், உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட 13 லேப்டாப்புகள், 12 ட்ரோன் கேமராக்கள், 20 மைக்ரோபோன்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
7 பேர் கைது
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ₹45 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, உரிய ஆவணங்கள் இல்லாமல் பொருட்களை எடுத்து வந்ததாகத் திருவாரூரைச் சேர்ந்த வெங்கடேஷ், விக்னேஷ், பாண்டிச்சேரியைச் சேர்ந்த அப்துல் அஹமத், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ரவி, அப்துல் காதர், திருச்சியைச் சேர்ந்த ஐயப்பன், மற்றும் கடலூரைச் சேர்ந்த பிரம்மா ஆகிய ஏழு பேரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.