விளையாட்டு

உலக மகளிர் ராபிட் செஸ் போட்டி.. சாம்பியனான இந்திய வீராங்கனை

உலக மகளிர் ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றார்.

உலக மகளிர் ராபிட் செஸ் போட்டி.. சாம்பியனான இந்திய வீராங்கனை
கோனேரு ஹம்பி

அமெரிக்காவின் நியூயார்க்கில் உலக மகளிர் ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இதன் இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி, இந்தோனேஷிய வீராங்கனை ஐரீன் சுகந்தரை எதிர்கொண்டார். அப்போது, கோனேரு ஹம்பி 11 புள்ளிகளில்  8.5 புள்ளிகளுடன் போட்டியை முடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.

சாம்பியன் பட்டம் வென்ற கோனேரு ஹம்பிக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த வெற்றியின் மூலம் சீனாவின் ஜூ வென்ஜூனுக்கு பிறகு அதிக முறை சாம்பியன் பட்டம் வென்றவர் என்ற பட்டியலில் கோனேரு ஹம்பி இரண்டாவது இடத்தில் உள்ளார். 

கடந்த 2012-ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற ராபிட் செஸ் உலக தொடரில் கோனேரு ஹம்பி வெண்கல பதக்கம் வென்றார். தொடர்ந்து, 2019-ம் ஆண்டு ஜார்ஜியாவில் நடைபெற்ற தொடரில் இவர் சாம்பியன் பட்டம் வென்றார். மேலும், கடந்த ஆண்டு உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் குகேஷ், சீன வீரர் டிங் லிரனை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார். இளம் வயதில் சாம்பியன் பட்டம் பெற்றவர் என்ற சாதனையும் படைத்தார். இவருக்கு 11 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்ட நிலையில் முதலமைச்சர் தலைமையில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், சாம்பியன் பட்டம் வென்ற குகேஷிற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஐந்து கோடி ரூபாய் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.