ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைப்பெற்று வரும் நிலையில், ஆர்சிபி அணி தங்களது வீரர்களுடன் நேர்காணல் மேற்கொண்டு அதனை தனது சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது வழக்கமான ஒன்று தான். இந்த நிலையில் விராட் கோலியிடம் மேற்கொண்ட நேர்காணலின் ஒரு சிறு பகுதியை தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது ஆர்சிபி. தற்போது அந்த வீடியோ தமிழ் ரசிகர்கள் மத்தியில் டிரெண்ட் ஆக தொடங்கியுள்ளது.
டெல்லியை பூர்விகமாக கொண்ட விராட் கோலியிடம், நீங்கள் இப்போது எந்த பாடலை அதிகம் கேட்கிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “நான் சொல்வதை கேட்டு நீங்கள் நிச்சயம் ஷாக் ஆவீர்கள். இதோ இந்த “நீ சிங்கம்” பாடல் தான்” என தன் மியூசிக் ப்ளே லிஸ்ட்டை கேமராவில் காட்டுவார்.
நீ சிங்கம் தான் என தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள திரைப்படம் பத்து தல. கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான பத்து தல திரைப்படமானது கன்னட மொழியில் வெளியான மஃப்டி திரைப்படத்தின் ரீ-மேக் ஆகும். சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நடித்திருந்த இத்திரைப்படத்தினை ஓபிலி என்.கிருஷ்ணா இயக்கியிருந்தார். இத்திரைப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.
இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ஓரளவு நல்ல வசூலை பெற்ற நிலையில், இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் செம ஹிட் அடித்தது. அதிலும், “நீ சிங்கம் தான்” பாடல் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் போட்டியின் போது தோனி களத்திற்குள் நுழையும் போது பின்னணியில் ஒலிபரப்பட்டது. தோனிக்கு என அப்படியே பாடல் வரிகள் செதுக்கப்பட்டது போல் இருக்கும். இதனைத்தொடர்ந்து பல எடிட் வீடியோக்கள் இந்த பாடலை வைத்து உருவாக்கப்பட்டு இணையத்தில் டிரெண்ட் ஆக தொடங்கியது.
இந்நிலையில் தான் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, தற்போது என்னுடைய பேவரைட் பாட்டு என “நீ சிங்கம் தான்” பாடலை கூற இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது. நடிகர் சிம்புவும் தனது x வலைத்தளத்தில், நீ சிங்கம் தான் என விராட் கோலியின் டிவிட்டர் அக்கௌண்டை டேக் செய்துள்ளார். விராட் கோலியின் பேவரைட் பாடல் நம்ம தமிழ் பாடலா? என தமிழ் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

Nee singam dhan @imVkohli ❤️🔥🦁 https://t.co/qVwdmnLusi
— Silambarasan TR (@SilambarasanTR_) May 1, 2025