விளையாட்டு

பச்சைக்கொடி காட்டிய விஜய்... சீறிப்பாய்ந்த அஜித் ! தொடங்கியது LE MANS CUP !

சில்வர்ஸ்டோனில் நடைபெற்ற Michelin Le Mans Cup கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைக்க, அஜித் குமார் ட்ராக்கில் சீறிபாய்ந்தார்.

பச்சைக்கொடி காட்டிய விஜய்... சீறிப்பாய்ந்த அஜித் ! தொடங்கியது LE MANS CUP !
Vijay Gives Green Flag to Ajith’s Race!
இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடைபெற்ற Michelin Le Mans Cup கார் பந்தயம், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எதிர்பாராத ஒரு மாஸ் தருணத்தை கொடுத்துள்ளது. அஜித் குமார் ரேசிங் அணி பங்கேற்ற இந்த சர்வதேச கார் பந்தயத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

பச்சைக்கொடி அசைத்த முதலமைச்சர் விஜய்!

Michelin Le Mans Cup-ன் Silverstone Round போட்டியில் இந்திய வீரர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் முதலமைச்சர் விஜய் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். 44 கார்கள் பங்கேற்ற இந்த பந்தயத்தை விஜய் அதிகாரப்பூர்வமாக பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

அஜித் குமார், Ajith RedAnt by Virage அணிக்காக LMP3 Pro/Am பிரிவில் களமிறங்கினார். அவருடன் பிரான்ஸைச் சேர்ந்த Romain Vozniak இணைந்து போட்டியிட்டார்.

ரேஸ் காரில் விஜய் - அஜித்.. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!

பந்தயம் தொடங்குவதற்கு முன்பாகவே சில்வர்ஸ்டோன் களத்தில் விஜய் - அஜித் சந்திப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அஜித்தின் ரேஸ் காரை மையமாக வைத்து இருவரும் ஒன்றாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த காட்சி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இருவரது ரசிகர்களுக்கும் இடையே நிலவி வந்த போட்டி மற்றும் விவாதங்களுக்கு மத்தியில், சர்வதேச ரேஸ் டிராக்கில் விஜய்யும் அஜித்தும் ஒரே ஃபிரேமில் தோன்றியிருப்பது ரசிகர்களுக்கு தனி உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அஜித்துக்காக கொடியசைத்த விஜய்!

சினிமா உலகில் போட்டியாளர்களாக பார்க்கப்பட்டு வந்த தல - தளபதி, இந்த முறை சினிமாவை தாண்டி சர்வதேச விளையாட்டு அரங்கில் ஒரே நிகழ்வில் இணைந்துள்ளனர்.

அஜித் குமார் ரேஸ் காரை ஓட்ட, முதலமைச்சர் விஜய் பச்சைக்கொடி அசைத்து பந்தயத்தை தொடங்கி வைத்த தருணம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. அஜித்தும், சில்வர்ஸ்டோன் வருகைக்காக விஜய்க்கு நன்றி தெரிவித்ததுடன், இந்தியாவில் இதுபோன்ற சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டிகள் நடைபெற வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் தெரிவித்துள்ளார்.

அரசியலை தாண்டிய சந்திப்பு!

விஜய்யின் சில்வர்ஸ்டோன் வருகை வெறும் சினிமா ரசிகர்களுக்கான நிகழ்வாக மட்டும் இல்லாமல், தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸை மேம்படுத்தும் முயற்சிகளுடனும் தொடர்புடையதாக பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவிலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் கட்டமைப்புகள், பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் சர்க்யூட் நிர்வாகம் குறித்து அறிந்து கொள்ளும் நோக்கத்திலும் விஜய்யின் இங்கிலாந்து பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதனால் சில்வர்ஸ்டோன் கார் பந்தயம், அஜித்தின் ரேசிங் பயணத்திற்கான மற்றொரு முக்கிய அத்தியாயமாக மட்டுமல்லாமல், ‘தல - தளபதி’ ஒரே இடத்தில் சந்தித்த தருணம்" என்ற வகையிலும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனம் பெற்றுள்ளது.