பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம்
ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் என்ற பகுதியில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப்பயணிகள், பொதுமக்கள் என 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர், கிரிக்கெட் வீரர்கள் பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மலைப்பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலை இந்தியா வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் கண்டித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தனது எண்ணங்களையும் கோபத்தையும் வெளிப்படுத்த சிராஜ் சமூகவலைத்தளத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் குறைந்தது 26 பொதுமக்கள், பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டுள்ளர். இது 2019ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பள்ளத்தாக்கில் நடந்த மிகக் கொடூரமான தாக்குதலாகும். பயங்கரவாத தாக்குதலை ஒரு "கொடூரமான செயல்" என்றும் பயங்கரவாதிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
பஹல்காமில் நடந்த கொடூரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் பயங்கரவாதத் தாக்குதலைப் பற்றிப் படித்தேன். மதத்தின் பெயரால் அப்பாவி பொதுமக்களைக் குறிவைத்து கொல்வது முற்றிலும் தீமை. எந்தக் காரணமோ, எந்த நம்பிக்கையோ, எந்தக் கருத்தியலோ இதுபோன்ற கொடூரமான செயலை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது" என்று சிராஜ் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதிகள் தண்டிக்கப்படுவார்கள்
"மேலும் அந்தக் குடும்பங்கள் அனுபவிக்கும் வலியையும் அதிர்ச்சியையும் என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. இந்தத் தாங்க முடியாத துயரத்தைத் தாங்கும் வலிமை அந்தக் குடும்பங்களுக்குக் கிடைக்கட்டும். உங்கள் இழப்புக்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். பயங்கரவாதிகள் கண்டுபிடிக்கப்பட்டு, தண்டிக்கப்படுவார்கள் என்றும் நம்புகிறேன்" என்று சிராஜ் மேலும் கூறியுள்ளார்.
இதேபோல் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ். லக்ஷ்மன் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், "பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலால் மிகுந்த வேதனை அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், விரைவில் நீதியை நிலைநாட்டப்படவும் பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்தியா ஒற்றுமையாக நிற்கிறது
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் தனது எக்ஸ் பக்கத்தில், "இன்று காஷ்மீரில் நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலால் மனம் உடைந்துவிட்டது. பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளின் இந்த கோழைத்தனமான செயலை நான் கடுமையாக கண்டிக்கிறேன். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் நமது துணிச்சலான ராணுவம், ஜம்மு காஷ்மீர் காவல்துறை மற்றும் துணை ராணுவப் படைகளுடன் இந்தியா ஒற்றுமையாக நிற்கிறது. நீதி வெல்லும்" என்று பதிவிட்டுள்ளார்.