தீவிரவாத தாக்குதலில் படுகாயமடைந்த 17 -க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில், நாடு முழுவதும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்தியா முழுவதும் சுற்றுலாத்தளங்களில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பா.ஜ.க. முன்னாள் எம்.பி.-யும், இந்திய அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளருமான கவுதம் கம்பீருக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளதாக டெல்லியில் உள்ள ராஜீந்தர் நகர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.
கம்பீர் அளித்துள்ள புகாரில் கூறியுள்ளதாவது, 'ஐ.எஸ்.ஐ.எஸ். காஷ்மீர்' என்ற அமைப்பிடம் இருந்து தனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக கம்பீர் புகார் அளித்துள்ளார். தனது குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் எனவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “இறந்தவர்களின் குடும்பங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். இதற்கு காரணமானவர்கள் அதற்கான விலையை கொடுப்பார்கள். இந்தியா சரியான பதிலடி கொடுத்து தாக்கும்” எனப் பதிவிட்டிருந்தார். தீவிரவாத தாக்குதலுக்கு கம்பீர் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இந்த மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. கம்பீருக்கு இதற்கு முன்னர் 2021-ம் ஆண்டும் இதுபோன்ற மிரட்டல்கள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Praying for the families of the deceased. Those responsible for this will pay. India will strike. #Pahalgam
— Gautam Gambhir (@GautamGambhir) April 22, 2025