வரவிருக்கும் ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக, தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை அணிகள் இறுதி செய்யும் நிலையில், சஞ்சு சாம்சன் - ரவீந்திர ஜடேஜா தொடர்பான வீரர்கள் பரிமாற்றம் (Trade) இன்று அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்தது. இந்த ஒப்பந்தங்கள் மற்றும் மற்ற முக்கியப் பரிமாற்றங்களும் நடந்துள்ளன.
சாம்சன் - ஜடேஜா பரிமாற்றம் உறுதி
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சஞ்சு சாம்சன் ஐந்து முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு மாற்றப்பட்டார். அதேசமயம், சிஎஸ்கே அணியின் ரவீந்திர ஜடேஜா, 2008 சீசன் வெற்றியாளர்களான ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிக்கு மாற்றப்பட்டார். மேலும், இந்தப் பரிமாற்ற ஒப்பந்தத்தில் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் சாம் கரன்னும் சேர்க்கப்பட்டார். அவர் சிஎஸ்கே-விலிருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மாற்றப்பட்டார்.
சாம்சன் - ஜடேஜா ஒப்பந்த விவரம்
இந்த ஒப்பந்தத்தில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஜடேஜா சிஎஸ்கே அணியில் ஒரு சீசனுக்கு ரூ.18 கோடி ஊதியம் பெற்ற நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ரூ.14 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
மற்ற முக்கிய வீரர்கள் பரிமாற்றம்
மற்றொரு பெரிய மாற்றமாக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ரொக்கப் பரிமாற்றம் மூலம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG) அணியில் இணைந்தார். ஷமியை ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் எஸ்.ஆர்.ஹெச். அணி ரூ.10 கோடிக்கு வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர் பரிமாற்றம் மூலம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி
ரவீந்திர ஜடேஜா 2012 ஆம் ஆண்டில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரவீந்திர ஜடேஜா விளையாடுகிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு ஐ.பி.எல்லில் குஜராத்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் ஜடேஜா கடைசி பந்தில் பவுண்டரி அடித்து வெற்றியை தேடித்தந்தார்.
இத்தகைய வீரரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வேறு அணிக்கு மாற்றியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இரண்டு ஆல் ரவுண்டர்களை வேறு அணிக்கு மாற்றி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனை வாங்கியதற்கான காரணம் என்ன என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

LIVE 24 X 7