ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான இந்தியா முன்னாள் சாம்பியன் இலங்கையுடன் இன்று மோதுகிறது.
இந்தியா, ஏற்கெனவே இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்ட நிலையில், இலங்கை அணி வாய்ப்பை இழந்துவிட்டது. இந்தத் தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காத ஒரே அணியான இந்தியா, லீக் சுற்றில் மூன்று வெற்றிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது.
இந்தியா - இலங்கை பலம்
இந்திய அணி பேட்டிங்கில் தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் ஷர்மா , சுப்மன் கில் ஆகியோர் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். பந்துவீச்சில் குல்தீப் யாதவ் பலம் சேர்க்கிறார். இவர் நடப்பு தொடரில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இலங்கை அணி சூப்பர் 4 சுற்றில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானிடம் தோல்வியைச் சந்தித்தது. தொடக்க ஆட்டக்காரர்களான பதும் நிசாங்கா, குசல் மென்டிஸ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது அணிக்கு பலவீனமாக உள்ளது. இந்த ஆட்டத்தில் ஆறுதல் வெற்றி பெற இலங்கை முயற்சிக்கும்.
நேருக்கு நேர்
இதுவரை 32 ஆட்டங்களில் மோதியுள்ள இந்த இரு அணிகளில், இந்தியா 22-லும், இலங்கை 9-லும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை.
இந்தியா, இலங்கை அணிகளின் உத்தேச வீரர்கள் பட்டியல்
இந்தியா: அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, சஞ்சு சாம்சன், அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி அல்லது வாஷிங்டன் சுந்தர், பும்ரா அல்லது அர்ஷ்தீப்சிங்.
இலங்கை: பதும் நிசாங்கா, குசல் மென்டிஸ், குசல் பெரேரா, சாரித் அசலங்கா (கேப்டன்), கமிந்து மென்டிஸ், தசுன் ஷனகா, ஹசரங்கா, சமிகா கருணாரத்னே அல்லது துனித் வெல்லாலகே, தீக்ஷனா, நுவான் துஷாரா, துஷ்மந்தா சமீரா.