விளையாட்டு

IPL 2025: மீண்டும் மும்பை அணியில் அர்ஜுன் டெண்டுல்கர்... கடமைக்காக கைதூக்கிய நிர்வாகம்..!

Arjun Tendulkar : ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை இண்டியன்ஸ் அணி அர்ஜூன் டெண்டுல்கரை இரண்டாவது சுற்றில் அவர் அடிப்படை விலைக்கு வாங்கியதால் சச்சின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 

IPL 2025:   மீண்டும் மும்பை அணியில் அர்ஜுன் டெண்டுல்கர்... கடமைக்காக கைதூக்கிய நிர்வாகம்..!
அர்ஜூன் டெண்டுல்கர்

Arjun Tendulkar : கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜூன் டெண்டுல்கர் ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை இண்டியன்ஸ் அணியால் வாங்கப்படாத நிலையில், இரண்டாவது சுற்றில் அவர் அடிப்படை விலைக்கே வாங்கப்பட்டுள்ளார். அர்ஜுன் டெண்டுல்கர் தற்போது, உள்ளூர் போட்டிகளில் கோவா அணிக்காக வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக விளையாடி வருகிறார். 25 வயதாகும் அர்ஜூன் மும்பை அணியில் இதற்கு முன் விளையாடி இருந்தாலும் இந்த ஏலத்தில் அவரை எடுக்க மும்பை இண்டியன்ஸ் அணி முதல் சுற்றில் முனைப்பு காட்டவில்லை.

அர்ஜூன் டெண்டுலகரும் தொடர்ந்து தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற முனைப்பில் விளையாடி வருகிறார். ஆனால், இன்னும் அவருடைய சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தவில்லை.  மும்பை அணிக்காக விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தாலும், கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றே கிரிகெட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.  அர்ஜுன் டி20 கரியரில், தன்னுடைய முதல் போட்டியை 2023 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாடினார். 

அர்ஜுன் டெண்டுல்கர் தனது கிர்க்கெட் கரியரில், ஒரு சதம் மற்றும் இரண்டு அரைசதங்கள் அடித்துள்ள நிலையில், அதிகபட்சமாக 120 ரன்கள் அடித்துள்ளார். அவரது T20 பேட்டிங் புள்ளிவிபரங்களில் 122.98 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். 

உலக கிரிக்கெட் வரலாற்றில் அவருடைய தந்தை மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்துள்ளார். ஆனால், இன்றுவரை ஆரம்ப நிலையிலேயே இருந்து வரும் அர்ஜூன் டெண்டுல்கருக்கு மீண்டும், மும்பை இண்டியன்ஸ் அணி நிர்வாகம் ஐபிஎல் மெகா ஏலத்தில் மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தின் முதல் சுற்றில் அர்ஜுன் டெண்டுல்கரை ஏலத்தில் எடுக்க ஐபிஎல் நிர்வாகமும் ஆர்வம் காட்டவில்லை. இடைவெளிக்குப் பின், நடைபெற்ற இரண்டாவது சுற்று ஏலத்தில் அர்ஜுன் டெண்டுல்கருக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த அடிப்படைத் தொகையான ரூ. 30 லட்சம் தொகைக்கு அர்ஜூனை மும்பை இந்தியன்ஸ் ஏலத்தில் எடுத்தது. 
 
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐந்து வருடங்களாக விளையாடி வரும் அர்ஜுன் டெண்டுல்கருக்கு இதுவரை அவருக்கு ஐந்து போட்டிகளில் மட்டுமே விளையாட வாய்ப்பு  வழங்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக இந்த சீசனிலும் நிச்சயம் அவருக்கு ப்ளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காது என்றும், நன்றி கடனுக்காகவும்,கடமைக்காகவும் மட்டுமே அர்ஜூனை மும்பை அணியின் நிர்வாகம் எடுத்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், சச்சின் ரசிகர்களை இந்த செய்தி மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.